Header Ads



பொது நன்மைகளுக்காக செயலாற்றுகின்ற, சமூகமொன்றினை கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூண வேண்டும்

மலர்ந்திருக்கின்ற ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். 

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு இத்தியாகத்திருநாளை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்  முஸ்லிம்களாகிய நாம் இறைவனுக்காக புரியப்படுகின்ற தியாகங்களின் பெறுமதியினை இன்று அதிகம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பிறரின் நலன்களுக்காகவும் மேம்பாடுகளுக்காகவும் அதிகம் அர்ப்பணிப்புகளுனும் தியாகங்களுடனும் செயற்பட முன்வரவேண்டும். நாம், நமது குடும்பம், நமது பிரதேசம் என்ற எல்லைகள் கடந்து உலகில் வாழுகின்ற அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் சிந்திக்க தலைப்படவேண்டும்.

 இன்று உலகலாவிய ரீதியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி பல இன மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு   ஏனையவர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை, பாதிப்புகளை தங்களது சொந்த நலன்களுக்காகவும்  அபிலாசைகளுக்காகவும் பலரும் சுயநலமாக  இன்று பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் இறைவனின் கட்டளையை ஏற்று தனது சொந்த விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி சமூக மாற்றங்களுக்காக  மாபெரும் தியாகங்களை நிகழ்த்திக்காட்டிய ஒரு குடும்பத்தின் வரலாற்றையே இஸ்லாம் இந்த தியாகத்திருநாளின் வாயிலாக நமக்கு கற்றுத்தந்துள்ளது.

இந்த தியாகங்களின் அடிப்படையில் நின்று பொது நன்மைகளுக்காக செயலாற்றுகின்ற சமூகமொன்றினை கட்டியெழுப்ப இன்றைய நாளில் நாம் திடசங்கற்பம் பூண வேண்டும்.  எனவே நாமும்  நமது நாட்டிலும் உலகலாவிய ரீதியிலும் வாழுகின்ற அனைத்து மக்களினதும் மீட்சிக்காகவும் நல்வாழ்விற்காகவும் மானுட ஒற்றுமைக்காகவும் நாம் இன்றைய நாளில் பிரார்த்திக்கவேண்டும். 

மீண்டும் அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள். 
' ஈத் முபாரக்'

No comments

Powered by Blogger.