தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், செய்த நல்ல வேளை
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பல்கலைக்கழக மாணவர்கள்! இலங்கை மைதானத்தில் நடந்த வியக்கும் செயல்
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.
நேற்று முன்தினம் பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
போட்டி நிறைவடைந்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மைதானம் முழுவதும் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
அவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடம் மாத்திரம் அன்றி மைதானத்தின் முழுப் பகுதியையும் சுத்தம் செய்துள்ளனர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும், ரசிகர்கள் மைதானத்தை சுத்தப்படுத்தியது, இலங்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 63:10)
www.tamililquran.com