முஸ்லிம் பெண்கள் போன்று, ஆடை அணிந்துவந்த ஆண் கைது
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் ஆடை அணிந்து காணப்பட்ட ஆண் ஒருவரை வெலிகடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வெலிகடை பிளாசா பொது வர்த்தக நிலைய கட்டிடத்தில் இந்த நபரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த இந்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சோதனையிட்ட போது, அவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது.
எந்த காரணத்திற்காக சந்தேக நபர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையை அணிந்து வந்தார் என்பது தெரியவரவில்லை. வெலிகடை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமிய பெண் முகத்தை மூடுவது கட்டாயப்படுத்தப்படாத தேவை கருதிய கடைப்பிடிக்க முடியுமான விடயமாகவே நிதானமான இஸ்லாமிய புத்தி ஜீவிகளால் பார்க்கப்படுகின்றது. எனவே மனித அறிவிற்கு உட்டபடாத படைப்பாளன் இந்த விடயத்தில் சலுகை வழங்கியிருப்பது என்பது சிந்தனை செய்ய கடவது.
ReplyDeleteஎல்லா சமூகத்திலுமுள்ள தவறிழைப்போரில் பலர் இவ் உடையைப் பயன்படுத்தித் தப்பிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஒரு இளைஞன் தான் விரும்பும்பெண்ணை பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு தகப்பனின் முன்னால் முகத்தை மூடிக்கொண்டு சென்ற சம்பவமொன்றினைக் கேட்டு கவலையடைந்துள்ளேன். இதனை நணபர்கள் மத்தியில் சவால் விட்டுச்செய்து காட்டியிருக்கின்றான்.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச்சென்று வந்த பல வீட்டுச்சாரதிகளின் அவதானத்தின்படி முகத்தை மூடிக்கொண்டு அதன் பாதுகாப்பில் மிகவும் கீழ்தரமான வேலைகளிலீடுபடும் பல சம்பவங்ளைச் சந்தித்திருப்பதாக கூறுகின்றனர். அத்தோடு இஸ்லாமிய நாடுகளில் முகம் மூடுவது தடுக்கப்படும் சட்டம் கொண்டு வரப்படும் போதே ஒழுக்க விழுமியங்கள் மேம்படும் என்றும் கருதுகின்றனர். -அல்லாஹூ அஃலம்- (இது ஒரு சுயவிமர்சனம்)