ஐ.தே.க. மீது முஸ்லிம்கள், மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் - வஜிர
நாட்டில் எதிர்காலத்தில் இன வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் படமாட்டது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கிறார். அண்மைக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற, கிந்தோட்டையில் கடந்த வருடம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தன தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
எமது நாட்டில் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் பல நூற்றாண்டு காலமாக மிகவும் ஒற்றுமையுடன், நல்லுறவுடன் வாழ்ந்து வந்திருக்கின்றன. இதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக அண்மைக்காலங்களில் முஸ்லிம் – சிங்கள உறவு பாதிப்புக்குள்ளாகும் வகையில் சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுவிட்டன.
முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சியே முஸ்லிம்களைப் பாதுகாக்கும் கட்சியாக அவர்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த நம்பிக்கையை ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பாதிப்படையச் செய்யமாட்டாது.
வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் உறுதியாக இருக்கிறார். அத்தோடு நஷ்டஈடுகள் துரிதமாக வழங்கப்பட வேண்டும் என்று புனர்வாழ்வு அதிகார சபையைப் பணித்திருக்கிறார்.
எதிர்காலத்தில் இவ்வாறான வன்செயல்கள் இடம்பெறக்கூடாது எனவும் அதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் படியும் பிரதமர் பாதுகாப்பு தரப்பினரையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கோரியுள்ளார் என்றார்.
நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கிந்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குச் சொந்தமான 123 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவுக்குட்பட்ட நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டன. அதற்கான காசோலைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரியவர்களுக்குக் கையளித்தார்.
கிந்தோட்டை வன்செயல்களினால் 133 சொத்துகள் பாதிக்கப்பட்டன இவற்றில் 10 சொத்துகள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நஷ்டஈடுகளுக்கு உரியவையாகும். அந்த 10 சொத்துகளுக்குமான நஷ்டஈடுகள் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு வழங்கப்படவுள்ளன.
-Vidivelli
தமிழ் அடிப்படைவாதத்தை வளர்த்துவிட்ட ஐ தே காவை கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிப்பர்
ReplyDeleteThis guy says. We will hit you and give you compensation". Therefore, all Muslims will vote for UNP. Good Logic......
ReplyDelete