Header Ads



முஸ்லிம் தனியார் சட்ட திருத்தமும், பிழையான அவதானங்களும்...!

அஷ்ஷைக் நாகூர் ழரீஃப் (அல் புகாரி)

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலை உணரப்பட்டு, அதற்கான ஓரு குழு அரச தரப்பினால் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இறுதியில் அக்குழுவே இரண்டாகப் பிரிந்து அவ்விரு அணிகளும் தத்தமது திருத்தங்களை அரசிடம் வௌ;வேறாகவே ஒப்படைத்துள்ளனர் என்ற ஒரு கவலையான செய்தியாகும்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸூப் அவர்களது தலைமையில் ஓர் அணியும், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தஃபா அவர்களது தலைமையில் மற்றுமொரு அணியுமாகும். முதலாவது அணியில் அதிகப்படியான பெண்கள் (முஸ்லிமல்லாதவர்கள் உட்பட) உள்ளனர். மார்க்க அறிஞர்கள் எவர்மில்லை. இரண்டாம் அணியில் பல ஆண்கள், அதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் அவர்களுடன் சட்டத்தரணிகள் பலரும் உள்ளனர்.

இவ்வாறு இரு அணியினரும் ஒப்படைத்துள்ள திருத்தப் பரிந்துரைகள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் சமூக மட்டத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் இவ்வேளை, ஒப்படைக்கப்பட்டுள்ள இரு பரிந்துரைகளுமே இஸ்லாமிய ஷரீஆவுக்கு உட்பட்டதுதான், அவற்றில் எந்த குழப்பமும் இல்லை, ஒரு சாரார் மற்ற சாராரை மதிக்கு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பாக அஷ் ஷைக் மன்ஸூர் நளீமி அவர்களும், அவர்களுடன் அக்ரம் அப்துஸ் ஸமத் போன்ற சிலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

 சில வேளை இவர்கள் தான் முதல் அணியினரை வழி நடாத்துகின்றனரோ என்ற ஐயம் சமூக மட்டத்திலும் ஆலிம்களிடத்திலும் பரவலாக ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது பற்றி மன்ஸூர் நளீமி அவர்களது ஓர் ஆக்கம் சமூக வலைத் தளங்களில் வலம் வருகின்ற படியால் அது பற்றி தெளிவுபடுத்த கடமைப்பட்டவன் என்ற வகையில் இதனை எழுதுகின்றேன்.

'அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையால் நாம் சர்ச்சையில் மூழ்கியுள்யோம். நிலமை இவ்வாறிருந்த போதும், உண்மையில் இதில் சர்ச்சைப்படுவதற்கோ குழம்பிக் கொள்வதற்கோ எதுவுமில்லை' என்றும், 'ஜம்இய்யத்துல் உலமாவின் தனியார் திருத்த நகலும் சரி, சலீம் மர்சூப் தலைமையிலான குழு சமர்ப்பித்த நகலும் சரி. இஸ்லாமிய ஷரீஆவுக்கு உட்பட்டவையோயாகும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏந்த நகலை ஏற்றுக் கொண்டாலும் அங்கு பிசை;சினைப்படுவதற்கு அங்கு எதுவுமே இல்லை என்றும் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

அல் குர்ஆனுக்கு விளக்கவுரை செய்வதும் எழுதுவதுமாக இருக்கும் ஓர் அறிஞர் இவ்விடயத்தை இவ்வளவு சிறுமைப்படுத்தி, பொடுபோக்கான கருத்தை எழுதியிருப்பதானது அவரது அல் குர்ஆன் பற்றிய அறிவிலும் ஈடுபாட்டிலும் எனக்கு மிகுந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

அத்துடன், சலீம் மர்சூப் அவர்களின் திருத்த நகல்களில் உள்ள ஷரீஆவுக்கு முற்றிலும் மாற்றமான சில அம்சங்களை மாத்திரம் சுருக்கமாக முன் வைக்கின்றேன்.

அ. திருமணப்பதிவு : திருமணப்பதிவினை (வாஜிப்) ஆக்கும் - கட்டாயப்படுத்தும் அதே வேளை பதியப்படாத திருமணத்தை அங்கீகரிக்காமை. உண்மையில் ஷரீஆவின் பார்வையில் இது பற்றி அல் குர்ஆனிலோ, ஹதீஸ்களிளோ அல்லது ஃபிக்ஹ் சட்ட நூல்களிலோ எங்கும் கட்டாயப்படுத்தப்படாத ஓர் அம்சத்தை எப்படி ஷரீஆவின் அந்தஸ்தில் வைத்து கட்டாயமாக்குவது? இது அல்லாஹ்வின் சட்டவாக்கத்தில் தலையிடுவதாக அமையாதா? (பதிவுத் திருமணத்தை காலத்தின் தேவையாகவோ, பெண் தரப்பினருக்கு பாதுகாப்பாகவோ நோக்குவதில் தவறில்லை. ஆனால் அதனைக் கட்டாயப்படுத்துவதும் அதுவல்லாத போது அத்திருமணம் செல்லுபடியற்றதாகும் என்று கருதுவதையுமே இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும்). இது ஷரீஆவுக்கு முற்றிலும் மாற்றமான பரிந்துரையாகும்.

ஆ. தலாக்கின் போது, கணவனுக்கு உள்ள உரிமையை காழி நீதிபதிக்கு வழங்குதல் : ஷரீஆவில் ஆண்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள உரிமையே தலாக் ஆகும். எனினும் மேற்படி உரிமையை ஆணிடம் இருந்து பிடுங்கி, காழி நீதிபதிக்கு வழங்குகிறது அவர்களது திருத்த நகல். இது ஷரீஆவின் பார்வையில் அல்லாஹ் ஆண்களுக்கு வழங்கியுள்ள ஓர் உரிமையைத் தடுத்தலாகும். எனவே இதுவும் ஷரீஆவுக்கு மாற்றமான ஒரு பரிந்துரையாகும். 

இ. திருமண ஒப்பந்தத்தின் போது 'வலீ' காரரின் அனுமதி தேவையற்றது என்பது அவர்களின் பரிந்துரையாகும். அதாவது 'வலீ' காரரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று ஹதீஸில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும், இம்முறைமை நடைமுறையில் இருக்கின்ற வேளையிலும், அதனால் பெண்களுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லாத போது அதனை தடுக்க முற்படுகின்றமையானது, சமூகத்தில் பாவத்துக்கும் பிழையான முடிவுகளுக்கும் இளம் தலைமுறையினரைத் தூண்டும் ஒரு இழி செயலாகும். எனவே, இளஞ்சமூகத்தை தீமையின் பக்கம் தட்டிக் கொடுக்கும், பெற்றாரின் உரிமையைப் பறித்தெடுக்கும் மேற்படி திருத்தமானதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதுடன் ஷரீஆ சட்ட வல்லுனர்களின் பெரும்பாலானவர்களின் அபிப்பிராயத்துக்கும் மாற்றமான ஒரு அபிப்பிராயமாகும்.

ஈ. பெண் காழிகள் நியமணம் : தற்போதைய யாப்பில் ஆண்களே காழிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது அவர்களின் பரிந்துரை. இது இமாம்களிடம் கருத்தொற்றுமை ஏற்படாத விடயமாக இருப்பினும், ஜும்ஹூருல் உலமா என்றழைக்கப்படும் அதிகப்படியான அறிஞர்களின் கூற்று பெண்கள் ஷரீஆ துரையில் காழியாக நியமிக்கப்பட முடியாது என்ற பலமானதாக அபிப்பிராயம் இருக்க, மிகவும் குறைந்த விரல்விட்டெண்ணும் அளவிலான ஓரிரு அறிஞர்ளின் பலமற்ற கருத்தினை முதன்மைப்படுத்துவதின் அவசியம் என்ன?, அதுவும் பல நிபந்தனைகளோடு உள்ள அபிப்பிராயத்தை பலப்படுத்த முயற்சிப்பதன் உள்நோக்கம்?. 

கருத்தொற்றுமை ஏற்படாத முரன்பாடான விடயங்களில் அறிஞர்களின் பலமான கருத்தையே கொள்ளப்பட வேண்டும் என்ற பொது விதியை மலுங்கடிக்கச் செய்து, பலமற்ற சிலரின் கருத்தை முதன்மைப்படுத்துவதில் உள்ள தேவை என்ன?.

குறிப்பு : பெண் காழி பற்றி விரிவாகப் பேசப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். அத்துடன், நடைமுறைச் சாத்தியமற்ற பல விடயங்கள் இதில் உள்ளன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

உ. பஸ்கு செய்து கொள்ளும் பெண்களுக்கும் மதாஃ (தாபரிப்புக் கொடுப்பனவு) கொடுக்கப்பட வேண்டும் என்கிறது அவர்களது திருத்த நகல். இது அல் குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ, ஸலஃபுகளின் நடைமுறையிலோ எங்குமில்லாத ஓர் அம்சமாகும் என்பதுடன், இதுவும் ஷரீஆவுக்கு மாற்றமான ஓர் அம்சமாகும்.

எனவே, இது போன்ற இன்னும் பல அம்சங்கள் ஷரீஆவுடன் முட்டி மோதி நிற்கின்ற வேளையில் எப்படி இரண்டு நகல்களும் ஷரீஆவுக்கு உட்பட்தோயாகும் என்று சமப்படுத்துவது?

இவற்றை நியாயப்படுத்துவது மாத்திரமின்றி, அடுத்த சாரார் பிழையான முன்மொழிவினை முன்வைத்திருக்கிறார்கள் என்பதைப் பேசுவதையும் கூட தவறானதாகும் என்று எச்சரிக்கும் தொணி.

அதாவது, 'அடுத்த சாராரைச் சாடுவது அல்லது அடுத்த சாரார் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் காட்ட முனைவது மிகப் பெரிய தவறாகும். இப்பகுதியில் ஜம்இய்யத்துல் உலமாவே மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று எச்சரித்துள்ளார்.

அதாவது ஜம்இய்யத்துல் உலமாவே வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று சமூகத்துக்குப் போதிக்கிறார்கள். அவர்கள் மௌனிகளாக இருக்க வேண்டும், பெண்ணியம் பேசுபவர்கள் மேடை போட்டு, வீடியோவுக்கு முன்னால் இருந்து பத்திரிகையாளர் மாநாடு மற்றும் எதையும் செய்து கொண்டு போகட்டும் என்று எழுதுவதானது, தான் சார்ந்த பொறுப்பான நிர்வணத்துக்கு எச்சரிக்கை விடுக்கின்ற தாணியாக மாறிவிட்டன இவர்களது சிந்தனைகள் என்பது ஐயமாகவே உள்ளது.

'அப்பாஸியர்கள், உஸ்மானியர்கள் காலப்பிரிவில் ஹனபி மத்ஹபே ஆட்சி மத்ஹபாக அங்கீகாரம் பெற்றது. ஸ்பெயினில் மாலிகி மத்ஹப் ஆட்சியில் இருந்தது' என்று எல்லா மத்ஹபுக்களும் சரியானவையே என்று நிரூபிக்க முற்படும் அதே வேளை ஆட்சி மத்ஹபாக நமது நாட்டில் சட்டத்திலும் வலக்கிலும் உள்ள ஷாஃபிஈ மத்ஹபின் சட்டத்திக்கும் முற்றிலும் மாற்றமான கருத்தை முன்வைத்து சமூகத்தில் குழப்ப நிலையை தோற்றுவிக்காது, ஆட்சி மத்ஹபினை நடைமுறைப்படுத்தலாமே?

தாங்களும் உங்களது தாய் அமைப்பான ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து செயற்பட முன் வரலாமே?

அடுத்ததாக, இரு நகல்களுமே இஸ்லாமிய ஆதாரங்களின் பின்னணியிலேயே தயாரிக்கப்பட்டன. எதை தெரிவு செய்வது என்பதைக் கீழ் காணும் இரு அடிப்படைகளின் ஊடாகவே நாம் நோக்க வேண்டும்:

1- சிறந்த ஸ்திரமான குடும்ப நலனுக்கு எந்த சட்ட நகல் மிகவும் பொருத்தமானது என்று நோக்கல்.
2- அடுத்த சமுதாயத்தினர் இஸ்லாத்தைப் பிழையாக புரிந்து, தூரமாக இடம் கொடுத்து விடலாகாது. இந்தப் பின்னணிக்கு எந்த நகல் மிகவும் பொருத்தமானது என நோக்கல்.

என்று கட்டுரையாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு ஆலோசனை சொன்னவர், அவரே அதற்கான பிரேரணையையும் முன் வைத்திருக்கலாமே? அதாவது யாருடைய திருத்த நகல் இக்காலத்துக்குப் பொருத்தமானது என்ற கருத்தனையும் தெளிவாக குறிப்பிட்டு தான் எந்த நகலுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பதையும் கூட சொல்லிவிட்டுப் போகலாமே? 

இறுதியாக, 'சலீம் மர்சூபின் திருத்த நகல் ஷரீஆவுக்கு முரன் என்பவர்கள் அது எவ்வாறு முரன்படுகிறது என்பதை ஆதாரத்தோடு முன்வைக்காது சமூகத்தளத்தில் கருத்து முன்வைப்பது பெரும் தவறாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். 


எவ்வாறு முரன்படுகிறது என்பதை, முடியுமான வரை சுருக்கமாக தெளிவு படுத்தியுள்ளேன். அது எவ்வாறு உடன்படுகிறது என்பதைக் கூடப் பார்க்காமல் சமூகத்தளங்களில் கருத்து முன்வைப்பது தவறாகாதா?

18 வயதாக அமைய வேண்டும் என்பது ஷரீஆவுக்கு முரணா? 
தலாக் சொல்பவர்கள் மதாஃ கொடுக்க வேண்டும் என்பது ஷரீஆவுக்கு முரணா? என்ற வினாவையும் தொடுத்துள்ளார் கட்டுரையாசிரியர். 

18 வயதுக்கு குறைவான வயதில் திருமணம் செய்த றஸூலுல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷரீஆவுக்கு முரணாக செயற்பட்டார்கள் என்று நிரூபிக்க வருகிறாரா? ஃபஸ்கு செய்தவர்களுக்கு மாதாஃ கொடுங்கள் என்று ஷரீஆவில் இல்லாத ஒன்றை அமுல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த வருகிறாரா? என்பது மயக்கமாகவே இருக்கிறது.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்...

7 comments:

  1. مقاصد الشريعةو فقه الموازنات و فقه الأولويات و فقه المؤالات و فقه لواقع وفقه الاقليات و وتنزيل النص و التعليل و القواعدالفقهية...المصلحة المرسلة والاستحسان واااستصحاب وسد الذريعة...
    I do not know who is this half backed cleric who dared to make such an unsound criticism about Ustaz's mansoor's talk on application of some aspects of personal law in Sri Lanka. There is nothing wrong in all what Ustaz said about application of personal law in Sri Lanka. He used some of above mentioned legal devices and legal principles to talk about the application of personal law in Sri Lanka. Many aspects of personal law issues related marriage and divorces are subjected to different opinions. Many Hadiths and many interpretations are available on these issues.... so, it a duty of educated scholars and Ulama in Sri Lanka to choose the most appropriate and applicable opinions to Sri Lankan contexts.. sometime, we do not find any texts for some issues in any divine texts or Hadith traditions.. so, it is a duty of Ulamah in light of general philosophy of Islamic law and public interest to find most applicable solutions or rulings. .. All what Ustaz said is 100% in concurrent with Islamic teachings in light of general philosophy of Islamic law. What he says is to choose most suitable opinions among all Islamic ruling sometime it may be not an opinion of the majority yet, if it is most appropriate for our context. we must choose it.The problem many Arabic college graduates even so called- self -declared Mufti do not understand what Ustaz talk about.. This writer should listen to ustaz speech again and again to know what he says..
    This is the difference between literal school of Islamic legal thought and maqasid oriented school of Islamic legal thought..
    to apply Islamic texts we need to have ...thorough knowledge of texts, contexts and knowledge of maqasid behind the text.. otherwise, you will end up like ISIS, TALIBAN and Al_Qaeda,
    The writer of this article is nothing but copy cut of the thinking of these groups. they end up in blood bath with their literal reading into texts.. yes, we should read the Qura'n with its literal meaning but to understand some verses and some Hadith you need to know the context as well otherwise application will be not possible..
    for instance can you chop the hands of thieves in Sri Lanka as they do in Saudi? can chop the heads of murders in Sri lanka as they do in Saudi>? can you chop the heads of Adulterous married men or women in Sri Lanka as they do in Saudi?
    think you limitation before you talk about Islamic law in Sri Lankan context..
    I'm sorry to say in Sri Lanka people can be graded into many groups when it come to Islamic talks ..
    some of them like children in kindergarten: they talk about Islam like children...
    some of them like grade five children when they talk about Islam...
    some of them like GCSE O/L students when they talk about Islam..
    some of them like A/L students.. when they talk about Islam..
    some are like graduates with some sound knowledge about Islam..
    some are specialists with masters degrees..
    some are like experts in the field of Islamic studies with Phd..and above post-doctoral level ..
    like medical students, normal doctors, MBBS doctors, consultants... like that we could grade people when it comes to knowledge of Islam..
    so, people should be careful when they listen to so many half backed clerics today..
    Ustaz does not say his personal opinions but he read all different books and select most suitable one for our context..

    these clerics do not read? what do you expect?

    ReplyDelete
  2. சலீம் மர்சூபின் திருத்த சட்டம் முழுக்க ஷரீஆவுக்கு முரணானது தான். இஸ்லாத்தின் கட்டளை வயது வந்த சக்தியுள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் முடித்து வையுங்கள் என்பதே அவ்வாறு இருக்க இந்த சர்வ மத ஆதரவாளருக்கு என்ன உரிமை உள்ளது இவர் பதினெட்டாக நிர்ணயம் செய்ய. இவர் என்ன அல்லாஹ்வா அல்லது தூதர.

    ReplyDelete
  3. அடுத்து தன் சொல்லி திருமணம் செய்யலாம் என்று ஒரு ஷரீயாவை குழிதோண்டி புதைக்கும் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளாரே. அது ஓடிப் போய் திருட்டு திருமணம் செய்கின்ற ஆட்களுக்கு நல்ல வாசியானது என்பதை மறந்துட்டிங்களே

    ReplyDelete
  4. Certain rules in Islam were changed when the new developments proved them to be no longer feasible. ie. ladies going for Jamath prayers and many more. Just like that men do abuse the permissions given the leave the women in disarray with kids. there are enough and more cases of such nature. I've seen Qazi's slide with men to give unreasonable judgement in favor. I've seen husbands rushing to get married again whilst the first wife and children are left without anything. I don't think and I don't believe what you claim as sharia as what really sharia intended for us. men like us abused the permissions given to us, denied the rights given to women for so long. Yet again MMDA is not Sharia, in fact ACJU opposed it when it first legislated 7 decades ago. I don't think there would be anything wrong if there is another layer of law of the land regulating our affairs other than Sharia, after all that's the case with rest of the affair of our lives (tax,criminal law, etc)

    ReplyDelete
  5. Our women are suffering a lot due to certain short comings in the existing law. There should also be proper regulations for implementing the law. Why do people become upset when there are difference of opinions? Discussions are a good thing..

    ReplyDelete

  6. مقاصد الشريعةو فقه الموازنات و فقه الأولويات و فقه المؤالات و فقه لواقع وفقه الاقليات و وتنزيل النص و التعليل و القواعدالفقهية...لمصلحة المرسلة والاستحسان واااستصحاب وسد الذريعة...
    knowledge of these branches of Islamic law is a must for us to deal with these kinds of issues.. We live in Sri Lanka as a minority community .. 1400 Islam did not give us solutions to some of the problems we face in Sri Lanka today.. 6666 verses do not have solutions for all problems of humanity.. so, we must use our reason, and intellect, common sense to apply Islamic principles today... Islam has got broader principles to cope with all issues..
    if you think you could chop the head of thieves or murders in Sri Lanka.. all these radicals should do it to see the consequences of it.. Likewise we are limited in Sri Lanka in application of law? so, what is the fess about this personal law.. many aspects of it we can not apply in Sri Lanka.. so, use your common sense to select most appropriate opinions that suit us. Do not copy Saudi..or Pakistani version of Islam...

    ReplyDelete
  7. வீடு சீதனம்எடுக்றார்ளே

    ReplyDelete

Powered by Blogger.