"ஏகமனதாக ஜனாதிபதி வேட்பாளராக, மஹிந்தவை கொண்டு வரவுள்ளோம்"
ஜனநாயக ரீதியான தலைவர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் போராட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்திருந்தார்.
குமார வெல்கம: என்னைப் பற்றி செய்தி வெளியிடுவதென்றால் அந்தக் காரையும் சேர்த்து படமெடுத்து செய்தி அறிக்கையிடுங்கள்.
ஊடகவியலாளர்: அப்படியென்றால் கார் இருக்கும் இடத்திற்கு சென்று மீண்டும் வாருங்கள்
குமார வெல்கம: படப் பிடிப்பா
ஊடகவியலாளர்: இல்லை படப்பிடிப்பிற்கு முன் ஆயத்த படப்பிடிப்பு
குமார வெல்கம: இன்னும் படம்பிடிக்க ஆரம்பிக்கவில்லை அல்லவா?
ஊடகவியலாளர்: என்ன பந்தயமொன்றுக்கா செல்கின்றீர்களா?
குமார வெல்கம: இல்லை நான் ஜிம்மிற்கு சென்றேன், ஆரோக்கியம் மிகவும் அவசியமானது என கௌதம புத்தரும் கூறியுள்ளார் அல்லவா. ஏனெனில் எதிர்வரும் 5ஆம் திகதி எங்களுக்கு பெரிய கடமையொன்று உள்ளதல்லவா?
ஊடகவியலாளர்: நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருக்கின்றீர்கள் அதற்கான முன் ஆயத்தங்களிலா ஈடுபடுகின்றீர்கள்?
குமார வெல்கம: ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிடவில்லை, மஹிந்த ராஜபக்ச ஐயாவே இருக்கின்றார். அவரையே நாம் அனைவரும் ஏகமனதாக ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வர உள்ளோம்.
ஊடகவியலாளர்: உங்களது உள்ளத்திலும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணம் உண்டல்லவா?
குமார வெல்கம: யார் மனதில் அவ்வாறான ஆசை இல்லை
ஊடகவியலாளர்: சில வேளைகளில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை பெயரிட்டால் என்ன நடக்கும்?
குமார வெல்கம: எங்களது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடும் போது, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க சந்தர்பம் கிடையாது.
ஊடகவியலாளர்: மஹிந்த போட்டியிடாவிட்டால் கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்
குமார வெல்கம: அப்பொழுது பார்ப்போம், அப்பொழுது ஜனநாயக ரீதியான தலைவர் ஒருவரையே நாம் தேர்தலில் நிறுத்துவோம். உங்களுக்கு வீடு சென்று நிம்மதியாக உறங்கக்கூடிய ஓர் தலைவரையே நாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்வோம்.
ஊடகவியலாளர்: கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் அவ்வாறான ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் என்பதனை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா?
குமார வெல்கம: இல்லை நான் அப்படிச் சொல்லவில்லைதானே. நான் கோத்தபாய ராஜபக்ச பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால் எங்களுக்கு இருப்பது ஒரே தலைவர்தான் அவர் மஹிந்த ராஜபக்சவேயாகும். இரண்டு ராஜபக்சக்கள் என்னிடம் இல்லை என்னிடம் இருப்பது ஒரே ராஜபக்ச அது மஹிந்த ராஜபக்சவாகும்.
ஊடகவியலாளர்: நீங்கள் புதிய வாகனமொன்றை எடுத்துள்ளீர்கள்
குமார வெல்கம: இல்லை இது எனது பழைய வாகனமாகும், எனது தந்தை பழைய லொறிகாரர் தானே அந்தக் காலத்தில் இருந்து நாங்கள் வாகனங்களை நேசிக்கின்றோம்.
ஊடகவியலாளர்: இந்தக் காரின் விலை என்ன? ஐந்து கோடி ரூபா வருமா
குமார வெல்கம : இல்லை அவ்வளவு இல்லை, நாடாளுமன்றில் வழங்கப்படும் வாகன அனுமதிப்பத்திரமொன்றுக்கு இந்த வாகனத்தை இறக்குமதி செய்ய முடியும்.
Post a Comment