Header Ads



அந்தப் படத்தைப் பார்த்து, மிகவும் மனவேதனை அடைந்தேன் - ஜனாதிபதி

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் இலங்கையில் யுத்தம் நடைபெறுகின்றது. இதற்கு அவசரமாக தீர்வு தேவைப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய நிலையான அபிவிருத்தி தொலைநோக்கு என்பதற்கான திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தின் முன்னல் முழந்தால் இட்டு வணங்கி விட்டு சிறுமி ஒருவர் புலமைப்பரிசில் பரீ்ட்சை எழுத சென்ற படத்தை பத்திரிகையில் பார்த்து மிகவும் வேதனையடைந்தேன்.

அதேபோல், புலமைப்பரிசில் எழுதச் சென்ற மற்றுமொரு மாணவியும், அவரது தாயாரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் 35 வீதமான பயிர்கள் விலங்குகளால் அழிக்கப்படுவதாகவும், யானைகள், மயில்களை விட மிகப் பெரிய கொள்ளையர்கள் குரங்குகளே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலமாக தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னணி கொள்ளையர்களான குரங்குகளே காரணம்.

நாட்டில் 14 இலட்சத்துக்கும் அதிகமான குரங்குகள் உள்ளன. இவை தினமும் ஒரு குலை தேங்காய்களையாவது நாசமாக்குகின்றன.

அந்த வகையில் பயிர்கள் அழியும் போது விலையும் உயர்வடைகின்றது. ஆனால் இதற்காக மக்கள் எம்மை விமர்சிக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. what street dog causing accidents and biting kids? Also street loitering cows?

    we should find ways to control their numbers too.

    ReplyDelete
  2. மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அழிக்க முடியும்

    ReplyDelete
  3. நாட்டில இத்தனை பிரச்சினை இருக்கும் போது இவருக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது?????

    ReplyDelete
  4. கொடிய சிங்கம் வாளெடுத்து உறுமும்,
    கொடியை சீரமைப்பதில் தான் தீர்வு!

    தேசியக் கொடி என்பது பல்லினத்
    தேசியக் கொடி என்றாக வேண்டும்!

    சிங்கத்தை பார்த்து சிங்களவர்கள் ஆட மற்றவர்கள் அனைவரும் மாடா என்ன?

    நீர் சிங்கமென்றால் புலிகளே நாமென
    சீறி விளையாடியதையும் கண்டோமே!

    நாட்டிலேயே மிருக ஆட்சி நாளெல்லாம்
    காட்டிலது இருப்பதோர் பொருட்டோ?

    ஒரு பானைச் சோற்றுக்கு
    ஒரு சோறு பதம் போல...

    பல்லினங்கள் வாழும் நம் நாட்டுக்கு பன்முகக் கொடியே பண்பான தீர்வு!

    உமர் போன்ற ஆட்சி உண்டென்றால்
    ஓநாயும்ஆடும் ஒன்றாயருந்த காண்பீர்!

    ReplyDelete
  5. எல்லாவற்றையும்விட பெரிய கொள்ளையர்கள் அரசியல் வாதிகளே.

    ReplyDelete

Powered by Blogger.