சிறிலங்காவுக்கு ஆடைகளை, ஏற்றுமதிசெய்த வடகொரியா
ஐ.நாவின் தடைகளை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக வடகொரியா மீது ஐ.நா அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையினால் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுதந்திரமான நிபுணர்கள் குழு, 2017 ஒக்ரோபர் தொடக்கம் 2018 மார்ச் வரையான 6 மாத காலப்பகுதிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே, குறிப்பிட்ட ஆறு மாத காலப்பகுதியில் ஐ.நாவின் தடைகளை மீது சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ததாக வடகொரியா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள், சிறிலங்கா, சீனா, கானா, இந்தியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி, உருகுவே உள்ளிட்ட நாடுகளுக்கு 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான ஆடைகளை ஏற்றுமதி செய்து, ஐ.நாவின் தடையை வடகொரியா மீறியுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment