புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்களிடம் உள்ளதா..?
விடுதலை புலிகளின் ஆயுதம் முஸ்லிம்களிடம் உள்ளதா? என்பது தொடர்பாக பூரண விசாரணை நடத்துவோம். நாட்டில் சட்ட விரோதமாக எவருக்கும் ஆயுதம் வைத்திருக்க முடியாது. இது தொடர்பாக பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரச முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விடுதலை புலிகளின் ஆயுதம் தற்போது முஸ்லிம்களிடம் உள்ளதாக புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலி அங்கத்தவர்கள் கூறியுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும குறிப்பிடுகையில்,
நாட்டில் எந்தப் பகுதியிலும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அப்படி ஏதும் இருந்தால் எமக்கு உடன் அறிவியுங்கள். இது தொடர்பாக பொலிஸார் விரைவான தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர். ஆகவே இது தொடர்பாக அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் என்றார்.
கண்டி கலவரத்தில் நடந்த எல்லாவற்றையும் கண்டு பிடித்து தண்டனையும் பெற்று கொடுத்துட்டாரு தலைவரு. இப்ப மொக்க போட இடமில்லாமல் திரியுது.
ReplyDeleteநீங்க சரியான மந்திரியாக இருந்தால் அந்த புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த விஷகிருமியை பிடித்து விசாரிக்க வேண்டும்.
ReplyDelete