நாட்டை அழித்து விட்டார்கள் - மகிந்த
தமது ஆட்சிக்காலத்தில் கட்டியெழுப்பட்ட நாட்டை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள தன்னை அழைத்திருப்பதாகவும், அழைத்திருப்பதற்கான காரணத்தை தான் சரியாக அறியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற திணைக்களத்திற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
இதேவேளை, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சி பெற்றுக்கொள்வது தொடர்பில் நீர்கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,
கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமான அணியாக செயற்பட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமது அணிக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
You are the big culprit
ReplyDeleteHe is the right & genuine person to rule this country.
ReplyDelete