சவூதி அரேபியா, யுத்தக் குற்றம் புரிந்துள்ளது - ஐ.நா. குற்றச்சாட்டு
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை யெமன் மீது நடத்திய சில தாக்குதல்கள் யுத்த குற்றம் என குறிப்பிட்ட ஐ.நா அறிக்கை ஒன்றை அந்தக் கூட்டுப்படை நிராகரித்துள்ளது.
பல தெளிவற்ற உள்ளடக்கங்களுடனான கூட்டுப்படையின் அறிக்கை ஒன்று சவூதி அரச செய்தி நிறுவனத்தில் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் வெளியிட்ட ஆவணத்தில், யெமன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தரப்பும் யுத்த குற்றத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களால் இந்த அறிக்கை தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக கூட்டுப்படை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யெமனில் கூட்டுப்படை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து இந்த ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையில் யெமன் அரச படை, அதற்கு ஆதரவான சவூதி தலைமையிலான கூட்டுப்படை மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்க்க குறைந்த அளவே முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
Post a Comment