அமெரிக்க குடியுரிமையை, ரத்துச் செய்வதில் கோத்தாக்கு சிக்கல்..?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஜனாதிபதிக் கனவை அமெரிக்கா கலைத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளும் உத்தேசத்தில் கடந்த 07ம் திகதி கோத்தபாய அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருந்தார்.
எனினும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பாக எந்தவொரு சாதகமான பதிலையும் இதுவரை வழங்கவில்லை என்பதுடன், கோத்தபாய தொடர்பான இரண்டு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிலளித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க குடியுரிமை நீக்கத்துக்கான விண்ணப்பத்தில் கோத்தபாய குறிப்பிட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை ஆராய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.
இதன் காரணமாக கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கத்துக்கான வேண்டுகோள் தற்போதைக்கு சாதகமாக பரீசிலிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
Post a Comment