மேன்முறையீட்டு தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தை நாடப்பேவதாக ஞானசாரரின் சட்டத்தரணிகள் அறிவிப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .
அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது.
எவ்வாறாயினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்மானித்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லீம் கள்ள கை வெச்ச இவரை அல்லாஹ் எப்படி மாட்ட வெச்சுருக்கான் எல்லப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
ReplyDelete