கொழும்பின் அண்டிய பகுதிகளில், முதலைகளின் எச்சரிக்கை
கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வாழும் முதலைகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுவது அவசியம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் டினால் சமரசிங்க, கருத்து தெரிவிக்கும்போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
பெல்லன்வில – வேருஸ் கங்கை, அத்திடிய தாழ்நிலப்பகுதி மற்றும் தியவன்னா ஆற்றை அண்டிய பகுதிகளில் முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சன நெரிசலான பகுதியாக இருப்பினும், நீர்வளம் நிறைந்த தாழ்நிலப்பகுதிகளில் முதலைகள் வாழ்வதற்கான சூழ்நிலை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், முதலைத் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றபோதும், அவ்வாறு அமைக்கப்படுகின்ற வேலிகளின் மூலம் போதுமான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக டினால் சமரசிங்ககே குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment