கிண்ணியாவில் பல இடங்களில், பெருநாள் திடல் தொழுகை
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(22) முஸ்லீம்களின் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காலையில் பல பகுதிகளிலும் விஷேடமான பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
கிண்ணியாவில் உள்ள பல இடங்களிலும் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
கிண்ணியா அல் அதான் பாடசாலை, அரை ஏக்கர் மைதானம், கிண்ணியா ரேன்ஜர்ஸ் மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும் தொழுகை நடாத்தப்பட்டது.
பல நூற்றுக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் ஹஜ் பெருநாள் தினத்தில் சகோதரத்துவம்,ஐக்கியம், ஒற்றுமை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதாபிமானம் கொண்டவர்களாக ஒவ்வொருக்கொருவர் கைலாகு கொடுத்து சந்தோசமாக பெருநாள் தினத்தை பெருநாள் தொழுகையின் பின்பு கொண்டாடி வருகின்றனர்.
Post a Comment