உலகக் கிண்ணக் கரம் போட்டி, சம்பியன் ஆகியது இலங்கை - 2 முஸ்லிம் வீரர்களும் பங்களிப்பு
இந்திய கரம் அணியைத் தோல்வியடையச் செய்து ஆண்களுக்கான உலகக் கிண்ணக் கரம் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி வென்றுள்ளது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 2 -1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
சமில் குரேயின் தலைமையில் நிசாந்த பெர்னாந்து, மொஹமட் சஷீட், உதேஷ் சஷிக ஆகியோர் இலங்கை அணி சார்பாக இத்தொடரில் பங்குபற்றினர்.
இத் தொடரின் மகளிர் பிரிவில் இலங்கை கரம் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
யஷிகா ராகுபெத்தவின் தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டயில் இந்திய அணியிடம் 3--–0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது. ஜோசப் ரொஷிடா, வலனி லியனகே, மதுஷா ராமநாயக்க இலங்கை சார்பாக இத் தொடரில் பங்குபற்றினர்.
இந்த போட்டிகளுக்கான இலங்கை அணியில் பிரபல தேசிய தரத்துடன் கூடிய வீர, வீராங்களைகள் இடம்பெற்றனர். அணியில் இடம்பெறும் 8 பேரில் 6 பேர் சிரேஷ்ட வீரர்களாவர், அவர்கள் சர்வதேச அனுபவம் உள்ளவர்களாவர்.
ஆண்கள் அணியின் சமில் தர்ஷன குரே (தலைவர்) (செலான் வங்கி) நிஷாந்த பெர்னாண்டோ (இலங்கை கடற்படை), சஹீட் ஹில்மி (ரோயல் கல்லூரி) உதேஷ் சந்திமா பெரேரா (இலங்கை விமானப்படை) ஆகியோர் இடம்பெற்றனர்
பெண்கள் அணியில் யஷிகா ராஹுபுத்த (தலைவலி) (இலங்கை கடற்படை) சலனி லக்மாலி லியனகே (இலங்கை இராணுவம்) ஆகியோர் இடம்பெற்றனர். மொஹமட் ஷெரிப்தீன் மற்றும் மதுவந்தி குணதாச ஆகிய இருவரும் மாற்று வீர, வீராங்கனையாக பெயரிடப்பட்டனர்.
இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க மற்றும் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் பிரின்ட்லி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த சுற்றுலாவுக்கான அதிகாரிகளாக சென்றனர்.
2012 இல் உலக கரம் சம்பினாக வெற்றி பெற்ற நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் 2014 மாலைதீவிலும் 2016 இல் பிரிட்டனிலும் இரு தடவைகள் ஸ்வின் லீக் சம்பியனாகத் தெரிவான சமில் தர்ஷன குரே ஆகியோர் முன்னைய வருடங்களின் சர்வதேச கரம் பொட்டிகளில் விளையாடி இலங்கைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை,இந்தியா ,பாகிஸ்தான் ,மாலைதீவு,கொரியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் இற்கிலாந்து ,பிரான்ஸ் ,ஜேர்மன் ஆகிய நாடுகள் அடங்கலாக 21 நாடுகள் பங்கேற்றன.
Post a Comment