செத்த வீட்டுக்குச் சென்ற மைத்திரியின் பின்னணியில், இப்படியும் இருக்கலாம் !
-Sivarajah Ramasamy-
ஜனாதிபதி மைத்திரி , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரது மரண வீட்டுக்கு சென்றது என்னவோ அரசியலுக்கு அப்பாற்பட்டது தான்...
ஆனால் அவர் அதன் மூலம் சில செய்திகளை சொல்லியிருக்கிறார் என தெரிகிறது...
1. “உங்களை மட்டும் நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை ... எனக்கு மாற்று வழிகள் உள்ளன” என்பதை ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு சொல்லியிருக்கலாம்....
2. எல்லை நிர்ணய அறிக்கையை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி மறைமுக சதி செய்ததாக கருதும் ஜனாதிபதி , தனக்கும் அடுத்த கட்ட நகர்வை செய்ய முடியும் எனபதை சுட்டிக்காட்டியிருக்கலாம்...
3. இப்போதுள்ள அரசியல் பரபரப்பை தணிக்க ஒரு யுக்தியை கையாண்டிருக்கலாம்... மஹிந்தவை மதித்தவர்.. அரசியல் பழிவாங்கல் இல்லாதவர் என்ற கருத்தை கட்சிக்குள் உருவாக்க எண்ணியிருக்க கூடும்...
4. மஹிந்த தரப்புக்கு அடுத்த தேர்தல்களில் வெற்றிவாய்ப்புக்கள் வரும் சூழ்நிலையே இருப்பதால் தொலைநோக்குக் கொண்டு அவர்களுடன் முரண்படாமல் உறவை ஏற்படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம்...
இன்னும் எதாவது காரணங்கள் இருக்கக் கூடும்...
காலம் , நேரம் , சூழ்நிலை என்பன தான் ஒருவரின் தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன...
ஜனாதிபதி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன ?
Post a Comment