இதனடிப்படையில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட ராஜபக்ச முகாம் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.
பாசிசவாத ராஜபக்சவினர் மத்தியில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள விதத்தை காண முடிந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விக்ரமபாகு இதனை கூறியுள்ளார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து மகிந்த ராஜபக்ச ஒரு கருத்தை முன்வைக்கும் போது, தினேஷ் குணவர்தன வேறு விதமான கருத்தை முன்வைக்கின்றார். இதன் மூலம் இவர்கள் ஒரு அணியாக எந்தளவுக்கு இணக்கத்துடன் இருக்கின்றது என்பது புலப்படுகிறது.
இதனடிப்படையில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட ராஜபக்ச முகாம் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.
ராஜபக்ச சகோதரர்கள் இடையில் காணப்படும் மோதல்கள், தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கருத்துக்கள் மூலம் வெளிப்படும் பரஸ்பர முரண்பாடான தன்மை என்பன அவர்களுக்குள் பிளவுகள் இருப்பதை காட்டுவதாகவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்
Post a Comment