அரசியல்வாதிகளின் சம்பளம், கிடுகிடு என உயருகிறது
அமைச்சர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படக் கூடும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நீதிபதிகளுக்கான சம்பளங்கள் உயர்த்தப்பட்டிருந்ததுடன் இந்த சம்பள உயர்விற்கு நிகராக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ம் திகதி நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சம்பள உயர்வு குறித்து பேசப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கான சம்பள அதிகரிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் எனவும், நிலுவைச் சம்பளங்கள் இந்த மாதத்தில் மொத்தமாக வழங்கப்படும் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளமானது 54285 ரூபாவிலிருந்து 120, 000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
பிரதி அமைச்சர் ஒருவரின் சம்பளமானது 63500 ரூபாவிலிருந்து 135000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் சம்பளமானது 65000 ரூபாவிலிருந்து 140000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
அதாவது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் 215 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கத் தரப்பு இதுவரையில் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Worst government ever. Increased taxes and now reaping benefits from it.
ReplyDelete