அரச மருத்துவர்கள், தலிபான்கள் போன்று செயற்படுகின்றனர்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதெனிய சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
பாதெனிய அவருடைய செயற்பாடுகளால் ‘பாப்பதெனிய’ போன்று (பாவம் செய்பவர்) இருப்பதாகவும், புதிய ஹிட்லரை நாட்டில் ஆட்சிக்குக் கொண்டுவர அவர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
பாதெனியவின் செயற்பாடுகள் ஹிட்லர் அல்லது தலிபான்களின் செயற்பாடுகள் போலவே இருக்கின்றன.
சண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி தொடர்பாக தொலைபேசி மூலம் கருத்தை அறிவதற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது எந்தவொரு நபரையும் மூளை பாதிக்கப்பட்டவர் என்பதை தம்மால் முறையாக நிரூபிக்க முடியும் எனக் கூறியுள்ளார். தலிபான்கள் அல்லது ஹிட்லர் ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது. ஹிட்லர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிக்கும் குழுவில் பாதெனியவும் இருப்பது தற்பொழுது புலனாகியுள்ளது என்றார்.
Post a Comment