பயங்கரவாதி இன்பராசாவுக்கு எதிராக, சட்டத்தரணி சறூக்கின் வழிகாட்டலில் பொலிஸில் முறைப்பாடு
(அப்துல்சலாம் யாசீம்)
அண்மையில் இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஆயுதங்கள் இருப்பதாக இனவாதக் கருத்துக்களை மீடியாக்கள் மூலம் வெளியிட்ட புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக இலங்கையில் முதல் தடவையாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பிலுள்ள சட்டத்தரணி சறூக் அவர்களின் வழிகாட்டலில் ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.எப்.எம். றியாஸ் என்ற சகோதரரினால் இம்முறைப்பாடு இடப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தல் என்ற காரணத்தின் படி CIB 3 - 201/243 என்ற இலக்கத்தின் கீழ் இம்முறைப்பாடானது வாழைச்சேனை பொலிசில் இன்று 27.08.2018ம் திகதி பதிவாகியுள்ளது.
இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டொன்றை சுமத்தி அதன் மூலம் அரசியல் இலாபம் அடையவும், இனங்களுக்கிடையில் குழப்ப நிலையை உருவாக்கவும், வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முயற்சித்த இந்த இன்பராசா போன்றவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அந்தவகையில் இலங்கையிலுள்ள முழு முஸ்லிம்களுக்காக சமூக நோக்கு அடிப்படையில் எதனையும் பொருட்படுத்தாது சட்ட நடவடிக்கைக்காக முன்வந்துள்ள ஓட்டமாவடி எம்.எப்.எம். றியாஸ் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். இது மற்றைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியான செயற்பாடாகும். வன்முறையான வழிகளிலன்றி சட்ட ரீதியாக பிரச்சினைகளை அணுகுவதற்கான ஒரு வழிகாட்டியாகவும் இவரின் செயற்பாடு காணப்படுகின்றது.
இவர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவராலும், வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம்களாலும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் என்பதோடு முழு முஸ்லிம் சமூகமும் இவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஏனையவர்கள் முறைப்பாடு செய்ய வேண்டிய முறை சட்டத்தரணி சறூக் அவர்களினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ENRU MUTHAN IVAR THUNBARASA ENRU ALLORAVUM ANBODU ALYKKAPPADUVAR.
ReplyDeletejazakallah for Mr Riyas for the sake of muslim ummah
ReplyDelete@Naushad, Because of he is real ex-LTTE, he was able to sell arms to Muslims
ReplyDeleteAjan நீயும் உண்மையான பயங்கரவாதி என்பதால் உன்னுடைய பங்கிற்கு மீடியா முன்பாக ஏதாவது உழரித்தல்லவேண்டியதுதானே.
ReplyDeleteஇது முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கவலை தருகிற ஒரு சூழலாகும். இது இன்பராசாவுடன் ஆரம்பித்த விடயமல்ல என்பதை புரிந்துகொள்வது அவசியம். கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் தலைவர் எச்சரித்ததை அரசு தரப்பு பாராளுமன்றத்திலேயே கோபத்துடன் எச்சரித்தது. சில சர்வதேச நாடுகள் இக்கூற்றை சாதரணமாக எடுக்கவில்லை என் தெரிகிறது. இது விஜகலா மகேந்திரன் சிக்கல் போன்ற ஒரு சூழலாகும். அதன் தொடற்ச்சிதான் முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கிறது என்கிற காய் நகர்த்தலாகும். கிழக்கில் இரத்த ஆறு ஓடுமென்கிற வெறிப்பேச்சை வாபஸ்பெற்று விபரீதங்களைத் தவிர்த்து சூழலை சுமூகமாக்குவது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். இதனை சகலரும் வலியுறுத்த வேண்டும்.
ReplyDeleteMuslim community can not rest in the face of challenges like this. Our voice should penetrate across the world. May Allah give the courage and guidance for Mr Riyaz as well as other brothers.
ReplyDelete