"எல்லை நிர்ணய அறிக்கைக்கும், எனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்புமில்லை"
மகாண சபை தேர்தல்களை திட்டமிட்டபடி ஜனவரி மாதம் நடத்துவதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட மீளாய்வு குழுவே பரிந்துரைகளை விரைவுபடுத்த வேண்டும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று -27- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உள்ளூராட்சி மன்ற அமைச்சர் கொண்டு வந்த ஒரு பிரேரணை தோல்வியடைய செய்யப்பட்டதுடன் அப் பிரேரணைக்கு அவரே எதிராக வாக்களித்துள்ளார் என்று எதிர் தரப்பினரும் அரசாங்க தரப்பினரும் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா,
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கும், எனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. எல்லை நிர்ணய அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அதிகாரம் மாத்திரமே தனக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
௺ங்க பாவம்
ReplyDeleteஎனக்கும் என் குடும்பத்திற்கும் கூட சம்பந்தம் இல்லை.
ReplyDelete