Header Ads



இலங்கையின் பிரபல நீர்வீழ்ச்சியில், ஏற்பட்டுள்ள மாற்றம்


ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் தற்போது நீரின் அளவு அதிகரித்துள்ளதால் உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

இலங்கையில் காணப்படுகின்ற உயரமான நீர்வீழ்ச்சிகளில் டெவோன் நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சி 281 அடி உயரத்தை கொண்டுள்ளது.

இதனால் நுவரெலியா நோக்கி பயணிக்கும் உல்லாசப் பயணிகள் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு வருகை தருவது வழக்கம்.

எனினும் தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சியை இரசிப்பதற்காக வரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் காணப்படும் சென்கிளயார் நீர்வீழ்ச்சியிலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.