Header Ads



எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தால், மாற்று வழிகள் உள்ளன - மிரட்டும் மகிந்த சமரசிங்க

மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை கலப்பு முறையில் நடத்த, தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வு வழங்கப்படும். இதற்கான அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கட்சியின் மாநாட்டை சிறப்பாக நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

மாகாணசபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான விவாதம் குறித்து தீர்மானம், இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும்.

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கா விட்டாலும் அதனை அமுல்படுத்த மாற்று முறைகள் உள்ளன.

இதற்கு அமைய சபாநாயகர், பிரதமர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். அந்த குழு இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கையில் எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக பரிந்துரை முன்வைக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமில்லை எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.