அமெரிக்காவில் மேயர் ஆகிறார், மல்யுத்த நட்சத்திரம் கேன்
WWE ரசிகர்கள் எளிதில் மறக்காத முடியாத நட்சத்திர போட்டியாளரான கேன், இப்போது நாக்ஸ் கவுண்டி நகர மேயர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்
அமெரிக்காவின் WWE மல்யுத்த போட்டிகள் நாடு கடந்தும் பல்வேறு நாடுகளில் பிரபலமான ஒன்று. இந்த போட்டியை பார்த்தவர்கள் மறக்க முடியாத போட்டியாளர்களில் ஒருவர் கேன்.
7 அடி உயரம் 100 கிலோ எடை என பிரம்மாண்ட உருவம் கொண்ட கேன், கண் கருவிழிகள் தெரியாத வண்ணம் ஒரு விதமாக பார்க்கும் போது, போட்டியை பார்ப்பவர்களுக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.
குறிப்பாக மற்றொரு போட்டியாளரான அண்டர்டேகர் உடன் இவர் போட்ட சண்டைகள் மிக பிரபலமான ஒன்று. 1995-ம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டியில் விளையாடி வரும் கேன், கடந்த ஜுன் மாதம் கடைசியாக கலந்து கொண்டார்.
க்லென் ஜேகப்ஸ் என்ற இயற்பெயர் கொண்ட கேன், அந்நாட்டை ஆளும் குடியரசு கட்சி சார்பில் நாக்ஸ் கவுண்டி நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டார். ஜனநாயக கட்சியின் லிண்டா ஹனேவை தோற்கடித்து மேயர் பதவிக்கு கேன் தேர்வாகியுள்ளார்.
Post a Comment