Header Ads



முஸ்லிம்கள் சட்டத்துக்கு முரணாக மாடுகளை அறுத்து, சமயக் கடமையை நிறைவேற்றினால் நாம் அதற்கெதிராக போராடுவோம்

முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மைக்­காக மாடுகள் அறுக்­கும்­போது நாட்டில் அமு­லி­லுள்ள சட்­டத்தை மீறக் கூடாது. மிரு­கங்­களை வீடு­க­ளிலும் தனியார் இடங்­க­ளிலும் பலி­யி­டாது அதற்­கென அர­சாங்கம் அனு­ம­தித்­துள்ள மடு­வங்­க­ளி­லேயே மாடுகள் அறுக்­கப்­பட வேண்டும். சட்டம் மீறப்­பட்டால் அதற்­கெ­தி­ராக சிங்­கள ராவய உட்­பட அமைப்­புகள் போராட்­டங்கள் நடாத்தும் என சிங்­கள ராவ­யவின் செய­லாளர் மாகல்­கந்த சுதத்த தேரர் தெரி­வித்தார்.

நேற்று மதியம் ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே  அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்;

‘சிங்­கள ராவய உள்­ளிட்ட பல பௌத்த அமைப்­புகள் மற்றும் தமிழ் அமைப்­புகள் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வ­தற்­கெ­தி­ராக கடந்த காலங்­களில் பல போராட்­டங்­களை நடாத்­தி­யுள்­ளன. தமிழ் மக்கள் மாடு­களை தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள். இலங்­கையில் மாடுகள் அறுக்­கப்­ப­டக்­கூ­டாது என கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் அப்­போ­தைய ஜனா­தி­ப­தி­யிடம் மக­ஜரும் கைய­ளிக்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு வரு­டமும் ஹஜ் காலத்தில் முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யாகக் கருதி பெரும் எண்­ணிக்­கை­யி­லான மாடு­களை அறுக்­கி­றார்கள். மாடு­களை போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்கும், மாடு­களை அறுப்­ப­தற்கும் சட்டம் ஒன்று உள்­ளது. அந்த சட்ட விதி­க­ளுக்கு அமை­வா­கவே மாடுகள் அறுக்­கப்­பட வேண்டும்.

பெரும்­பா­லான முஸ்­லிம்கள் நாட்டின் சட்­டத்தை மதி­யாது சட்­டத்­துக்கு முர­ணான வகையில் வீடு­க­ளிலும் பள்­ளி­வா­சல்­க­ளிலும் மாடு­களை அறுக்­கி­றார்கள். இவை நிறுத்­தப்­பட வேண்டும். அர­சாங்கம் அனு­ம­தித்­துள்ள மடு­வங்­க­ளிலே மாடுகள் அறுக்­கப்­பட வேண்டும்.

மாடுகள் கள­வாக வாக­னங்­களில் நெருக்­க­மாக அடைக்­கப்­பட்டு போக்­கு­வ­ரத்து செய்­யப்­ப­டு­கி­றது. இதனால் மிரு­கங்கள் பல  அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. கன்று ஈன­வுள்ள, கர்ப்­ப­முற்­றுள்ள பசுக்­களும் அறுக்­கப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு எதி­ராக பாது­காப்பு பிரிவினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்கள் சட்டத்துக்கு முரணான வகையில் மாடுகளை அறுத்து தமது சமயக் கடமையை நிறைவேற்ற முயற்சித்தால் நாம் அதற்கெதிராக போராட்டங்களை நடத்துவோம்’’ எனத் தெரிவித்தார்.
-Vidivelli

7 comments:

  1. True. Muslims should obey the country law.

    ReplyDelete
  2. I believe Muslims will follow the rules of this country when they kill animals for food. It is not sin killing animals for food and all are created by God for Human beings. But everything must be followed in an orderly manner.

    ReplyDelete
  3. Government has officers for implementing laws. Mot every on can take laws and reaction in to their hand....

    ReplyDelete
  4. மூச்சு எடுக்க முடியாத வகையில் மாடுகளை நெருக்கமாக அடைத்து கொண்டுசெல்வதையோ கண்ட கண்ட இடங்களில் மாடுகளை அறுத்து சூழலை மாசுபடுத்துவதையோ இஸ்லாமும் தடுக்கிறது. இஸ்லாம் என்பது ஒழுங்குமுறைகளும் ஒழுக்கமும் உள்ள மார்க்கம். நாங்கள் இந்த இனவாதிகளுக்கு பயப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயப்பட கடமைப்பட்டுள்ளோம்.
    கெளரவ உலமாக்களே, இந்த இனவாதிகள் ஒரு பெரிய திட்டத்துடன் இருப்பதாற்போல் தெரிகிறது. எங்கள் பகுதிகளை கண்காணிக்க இவர்களது காவாலிக்குழுக்கள் தயாராக இருக்கக்கூடும். இன்னும் இரண்டு வாரங்களும் இரண்டு குத்பாக்களும் இருக்கின்றன. மக்களை அறிவுறுத்துங்கள், எச்சரிக்கை செய்யுங்கள். மற்றுமொரு கலவரம் ஏற்படாமல் தடுங்கள்.

    கத்தியை புத்தியுடன் தீட்டுவோம்..

    ReplyDelete
  5. This bikku law maker and law breaker.

    ReplyDelete
  6. This Muslim community in this country has always obeyed the laws of this country. There is no evidence in the history that they broke or violated the laws...they have always contributed unity, peace, and solidarity of their motherland.. no one but the terrorists who broke the country's laws.. The faith of lslam has granted us clear guidance towards every our act.. they have the best teaching on patriotism and compliance with the laws... so, they are committed to ensure their continued supports to the integrity of their nation..

    ReplyDelete
  7. The Muslim community in this country has always obeyed the laws of this country. There is no evidence in the history that they broke or violated the laws...they have always contributed to unity, peace, and solidarity of their motherland.. no one but the terrorists who broke the country's laws.. The faith of lslam has granted them clear guidance towards their every act.. they have the best teaching on patriotism and compliance with the laws... so, they are committed to ensure their continued supports to the integrity of their nation..

    ReplyDelete

Powered by Blogger.