மன்னாரில் புலிகள், எவ்வித தடையுமின்றி செயற்படுகின்றனர்
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் எவ்வித தடையுமின்றி தங்களுடைய தேவைக்கேற்ப செயற்படுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் தலை தூக்கியுள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ் சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான மீன்பிடி ஆராய்ச்சி திணைக்களம் மன்னார் பிரதேசத்தில் இருக்கின்றது. அதில் தமிழர்களே சேவையாற்றுகின்றனர்.
ஆனால், அந்தப் பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வருகை தந்து அந்தத் திணைக்களத்திற்கு நெருக்கடி கொடுத்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்குள்ள அதிகாரிகள் சேவை செய்ய முடியாதெனக் கூறி அந்தத் திணைக்களத்தை மூடிவிட்டதால் தற்போது மன்னார் பகுதியில் மீன்பிடி ஆராய்ச்சித் திணைக்களம் இயங்காதுள்ளது.
பொலிஸார் முன்னிலையிலேயே அந்தத் திணைக்களத்திற்கு தாக்குதல் நடத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதன்போது தாக்குதல் நடத்தினர். ஆனால் இது குறித்து தற்போது வரை ஒருவரையும் கைது செய்யவில்லை. அவ்வாறாயின் சட்டம் எங்குள்ளது. சாதாரண அரசியல் செயற்பாடுகளுக்கு சட்டம் பாயுமாயின், இந்தச் செயற்பாட்டில் ஏன் சட்டம் செயற்படவில்லை.
ஆகவே, தற்போது மன்னார் பிரதேச மக்கள் அங்கு மீண்டும் விடுதலைப் புலிகள் ஆட்சி நடக்கின்றதாகத் தெரிவிக்கின்றனர். மீண்டும் விடுதலைப் புலிகள் ஆட்சி உருவாகிவிட்டது.
அவ்வாறாயின் அங்குள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன? ஏன் இதுவரை அந்தச் செயற்பாடு தொடர்பில் எவரையும் கைது
செய்யவில்லை? ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை? ஆகவே மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலியினர் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப செயற்படுகின்றனர். இதனைத் தடுப்பதற்கு எவ்வித செயற்பாடுகளும் கிடையாது.
ஆகவே , தற்போது நாட்டில் பொலிஸாருக்கு ஒரு சட்டமும் வடக்கிற்கு ஒரு சட்டமும் வேறு பிரதேசங்களுக்கு வேறு சட்டமுமே கையாளப்படுகின்றது. இன்று நாட்டில் அநீதியே இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன் என்கிற கிருஸ்துவ பயங்கரவாதி தான் மானாரில் புலிகளை அடாவடி செய்கின்றான். அவனை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்து விசாரணை நடாத்த வேண்டும்
ReplyDeleteWho is this guy?
ReplyDeleteஆமாம் கள்ள பாஸ்ட்போர்ட் எடுத்தவங்கள் பாராளுமன்றத்துக்கு குண்டு வைப்பேன் என கூறியவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திலேயே சுதந்திரமாக திரிகின்றார்கள். அவர்களுக்கு என்ன சுகபோக வாழ்வா. நீ உருப்படியா செய்த வேலை ஒரு அழகான பெண்ணை பெற்றெடுத்தது தான்.
ReplyDeleteTerrorism can not be given another chance in Sri Lanka. Anyone who acts in favour of tigers should be curbed.
ReplyDeleteHello Gtx, What about Rishard?
ReplyDelete