என்னை பதவி நீக்கினால், எல்லோரும் ஏழையாகி விடுவார்கள் - எச்சரிக்கிறான் டிரம்ப்
அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், அதிபர் டொனல்ட் டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார்.
அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்துள்ள பதிலில் ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெஃப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலாக இந்த வெளிப்படையான கண்டிப்பு செஷன்ஸ் தரப்பில் இருந்து வந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வந்துள்ளார்.
குறிப்பாக 2016-ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை நீதித்துறை கையாளும் விதம் குறித்து அவர் விமர்சன கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதிபர் டிரம்பின் ஆதரவாளராக முன்பு இருந்துவந்த செஷன்ஸ், பாரபட்சமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த விசரணையில் இருந்து விலகி, துறையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள ராட் ரான்ஸ்டெனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.
டிரம்ப்பின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்துக்கும் ரஷ்யாவுக்குமிடையே தொடர்புள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரித்து வந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, 2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது.
இந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்தார்.
2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோவன் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.
வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
இந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோவன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் 80% அரசியல், பொருளாதார செல்வாக்கு யூதர்களின் கையில் உள்ளது. Trump ஒரு கைப்பொம்மை அவளவுதான், மீறினால் Lincoln, Kennedy, Clinton போன்றோருக்கு நடந்துதான் நடக்கும்.
ReplyDeleteYes. But not at all.(Example; Obama)
ReplyDeleteThen what is the position of democratical viting system
ReplyDelete