ஈரான், சிரியா இடையே ராணுவ ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது
சிரியாவின் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக ஈரான் நாட்டு இராணுவ படைகள் போரிட்டு வருகின்றன. சிரியா உள்நாட்டு போரில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களும் போரிட்டு மக்களை இரையாக்கி வருவதாக கருத்து நிலவுகிறது.
இதையடுத்து சமீபத்தில், சிரியாவில் இருக்கும் ஈரான் படைகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பதிலளித்திருந்த ஈரான், சிரியா அதிபரின் வேண்டுகோளை ஏற்று ஈரான் உதவி வருவதாகவும், படைகளை திரும்ப பெரும் எந்த நோக்கமும் தற்போது இல்லை எனவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நேற்று ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக சிரியா சென்றார். அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே இராண்வ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
Post a Comment