Header Ads



மலிங்க விளையாடனுமா..? இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் லசித் மலிங்கா. தனது யார்க்கர் பந்து வீச்சால் உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியவர். 34 வயதாகும் மலிங்கா 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கவனம் செலுத்தினார். 2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மலிங்காவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அவரை பந்து வீச்சு ஆலோசகராக நியமித்தது.

இதனால் இலங்கையில் நடைபெறும் உள்ளூர் தொடரில் மலிங்கா விளையாடவில்லை. உள்ளூர் தொடரில் விளையாடினால் மட்டுமே தேசிய அணியில் இடம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டாக தெரிவித்தது. இதனால் 2017 செப்டம்பரில் இருந்து சர்வதேச போட்டிக்கான அணியில் இடம்பெறாமல் இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற கனடா குளோபல் டி20 லீக் தொடரில் மலிங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடரில் இடம்கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. இந்நிலையில் உள்ளூர் போட்டியில் விளையாடினால் இடம் உறுதியாக கிடைக்கும் என இலங்கை தலைமை பயிற்சியாளர் ஹதுருசிங்காக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹதுருசிங்க கூறுகையில் ‘‘மலிங்கா எங்களுடைய திட்டத்தை முழுமையான நிறைவேற்ற வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது. அவர் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும். இதில் நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கமாட்டோம்.

இலங்கை அணிதான் நம்பர் ஒன். அணி கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவரை மாறுபட்ட கோணத்தில் அனுக இயலாது. மலிங்கா தரம் வாய்ந்த வீரர். முந்தைய காலத்தில் பந்து வீசிய மாதிரி தன்னால் தற்போதும் பந்து வீச இயலும் என அவர் நிரூபிக்க வேண்டும். பந்து வீச்சில் மட்டுமல்ல, பீல்டிங்கிலும் அசத்த வேண்டும். அவர் விளையாடுவதற்கு விரும்பினால்  உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும்’’ என்றார்.

No comments

Powered by Blogger.