மகிந்தவின் "ஜனபல சேனா"வை போட்டுத்தாக்கும் சமீர பெரேரா
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நீண்டகாலமாக களியாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைக்காத நிலையில், நேற்று ஜனபல சேனா என்ற பெயரில் அவர்கள் கொழும்பில் களியாட்டத்தில் ஈடுபட்டதாக பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர். அதனை அவர்கள் ஜனபல சேனா என்று கூறுகிறனர். ராஜபக்ச அணியினருக்கு, ராஜபக்சவாதிகளுக்கு அண்மைய காலத்தில் களியாட்டத்தில் ஈடுபட வாய்ப்புகிடைக்கவில்லை.
தமது ஆலயத்திற்கு சென்று தமது தெய்வத்தை வழிபட்டு மகிழ்ச்சியடைய அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு அவர்களுக்கு நேற்று மீண்டும் கிடைத்துள்ளது.
மகிந்த ராஜபக்ச தனது ஆட்சி அதிகாரம் கைவிட்டு போன பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசியல் களியாட்டுகளை நடத்தி வந்துள்ளார். அண்மைய வரலாற்றில் மகிந்த ராஜபக்சவே அரசியலை களியாட்டமாக மாற்றிக்கொண்டவர்.
அவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை பேச மாட்டார்கள். ராஜபக்சவாதிகள் ஒன்று கூடி மது அருந்தி சாப்பிட்டு விட்டு சென்று விடுவார்கள். இதுதான் ராஜபக்சவாதிகளின் அரசியல். மகிந்தவும் அப்படியான அரசியலை செய்தாக வேண்டும். இதுதான் அரசியல் களியாட்ட தொழிற்துறையாக மாறியுள்ள நிலைமை.
பாசிவாதிகளே அரசியலை மகிழ்ச்சியாக கொண்டாடும் களியாட்டமாக மாற்றிக்கொண்டவர்கள் என அரசியல் அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
பாசிவாதம் என்பதே இதில் முக்கியமானது. இடி அமீன், ஹிடலர் போன்றவர்களும் இப்படித்தான் நடந்து கொண்டனர். அவர்களை கொண்டாடுபவர்கள், கட்சியினர் அல்ல. இவர்கள் தமது சாமியை கும்பிட வருவது போல் வந்து சத்தமிட்டு, மகிழ்ச்சியடைந்து திரும்பி செல்வார்கள்.
பாசிசவாதிகளே அரசியலை களியாட்டமாக மாற்றிக்கொள்வார்கள். நாங்கள் மகிந்த ராஜபக்சவிடமும் இதனையே காண்கின்றோம். கூட்டு எதிர்க்கட்சி அல்லது ராஜபக்ச அணியினர் கீறல்கள் ஏற்பட்டுள்ளன.
ஒருவருக்கு ஒருவர் வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், அவர்களை ஒன்றிணைக்கவும் ஒன்று கூட்டவும் ஒரு போராட்ட கோஷம் வேண்டும்.
மகிந்த ராஜபக்சவின் இந்த ஜனபல சேனா போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோஷங்கள், மகிந்த ராஜபக்சவிடமே திருப்பி கேள்வி எழுப்பக் கூடிய கோஷங்கள் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment