700 வருட முஸ்லிம்களின் வரலாற்றினை, பறைசாற்றும் கஹடபிட்டிய அடக்கஸ்தலம்;
2003 ஆம் ஆண்டில் வெளிவந்த சம்பிக்கவின் 'அல் கைதா' எனும் நூலில் முஸ்லிம்களின் வரலாறு வெறும் 400 வருடங்களுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதே அன்றி வேறில்லை.
அத்தோடு Professor லோனா தேவராஜ தன் தேடலில் முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்களுக்கு மேலானது என தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். எனினும் நம் வரலாறு இதை விட பழமையானது என இன்னும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு பல கதைகள் இருக்க நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியை ஆராயும் முகமாக அடியேனும் சில தேடல்களில் ஈடுபட்டேன்.அந்த வகையில் இது வரையில் நம் வரலாறு ஆனது 700 வருடங்களுக்கு மேலானது என்பதை நிறூபிக்க கூடிய சான்றுகள் சில எனக்கு கிடைக்கப்பெற்றது.
1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி ,கண்டி வரலாற்று ஆசிரியர் S.S.M நானயக்கார இனால் 'A 14th century Sinhala king's gift to a Muslim Saint 'எனும் தலைப்பில் எழுதப்பட்டு ஆங்கில பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒர் கட்டுரை நமது வரலாறு 700 வருடங்களுக்கு மேலானது என சான்று பகிர்கின்றது.
இந்த கட்டுரையில் பின்வருமாறு கட்டுரையாசிரியர் வரலாற்றினை பதிவிடுகிறார்.
1344 ஆம் ஆண்டு ஈராக்கின் பக்தாத் நகரில் இருந்து 3 பக்தர்கள் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.பின் சிவனொளிபாதமலைக்கு கால் நடையாக சென்று தரிசித்துவிட்டு அங்கிருந்து திரும்பும் போது களைப்பினால் மூவரில் ஒருவரான 'Bawa Kufa Walliullah' அவர்கள் மகாவலி கங்கைக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓர் இடத்தில் இளைப்பாறினார்.அப்போது அந்த பசுமையான இடத்தின் அழகில் மயங்கி தன் மிகுதிக் காலத்தையும் அங்கே கழித்துவிட எண்ணி அங்குள்ள ஓர் கித்துள் மரத்தடியில் ஆழ்ந்த வழிப்பாட்டில் மூழ்கினார், சிறிது நேரத்தின் பின் அரச குடும்பத்தில் பணியாற்றும் ஓர் சேவகன் தன் பணிக்காக கித்துல் மரத்தடிக்கு வந்த போது ஓர் வெள்ளை நிற அன்னியர் ஒருவர் அமர்ந்திருப்தை கண்டு ,தன் வேலைகளை முடிக்க அவரை விலகுமாறு வேண்டினான், எனினும் பதில் ஏதும் கிடைக்காததால் கோபமுற்ற சேவகன் வலியுல்லாஹ்வின் மூக்கை அறுத்து , அவரை கிழே தள்ளி விட்டு கித்துள் மரத்தில் ஏறி பின் கீழ் இறங்கும் போது அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.தன்னால் அறுக்கப்பட்ட வலியுல்லாஹ்வின் மூக்கு மீண்டும் அதே இடத்தில் இருப்பதை கண்டு அதிர்சியுற்ற அவன் இந்த செய்தியை தன் அரசனுக்கு தெரியப்படுத்தினான்.
உடனடியாக அக்காலத்தில் கண்டியை ஆண்ட மன்னன் 4ம் புவனேகுபாகு ,குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு தூது அனுப்பினான்,எனினும் அதனை வலியுல்லாஹ் மறுத்துவிட,அரசன் இவர் பற்றி விசாரித்தவுடன் இவர் ஓர் அராபிய நாட்டை சேர்ந்தவர் என்ற செய்தி கிடைக்கப்பெற ,பெரியவரை சந்திக்க தன் படை சூழ ,அரபி மொழி பெயர்பாளர்களோடு (கவனிக்க- அரசன்னிடம் முஸ்லிம்கள் ஏலவே இருந்தமைக்கு சான்று) யானைப் படையோடு செல்கிறான்.
சுமார் 400 மீற்றர் தூரம் குறித்த இடத்திற்கு இருக்கும் போது தன்னுடைய யானைப்படை வழக்கத்திற்கு மாறாக முன் நகர மறுத்ததை தொடர்ந்து அரசன் கால் நடையாகவே வலியுல்லாஹ் அவர்களை சந்திக்க செல்கிறார். வலியுல்லாஹ் அவர்களை கண்டதும் அரசன் தன் சேவகனின் செய்தி மற்றும் தன் யானையின் செயல் அனைத்தையும் கொண்டு குறித்த மனிதர் சாதாரணமானவர் அல்ல மாறாக holy man என்பதை அடையாளம் கண்டு கொள்கிறார்.
உடனடியாக அரசன் தன் மொழிப்பெயப்பாளர் மூலம் அவரின் தேவை குறித்து வினவும் போது தன் மிகுதி காலத்தையும் தான் இங்கே கழிக்க வேண்டும் என கூறப்பட்ட போது தாங்களுக்கு எவ்வளவு இடம் வேண்டும் என்று அரசன் கேட்க தன் கையில் இருந்த ஜபரி மாலை(தஸ்பிஹ் கோரு) இனை சுழற்றி விட்டார் வலியுல்லாஹ்.உடனே அரசன் அந்த மாலையால் உருவாக்கப்பட்ட ஒளி இன் வட்டத்தினாலான முழு நிலத்தையும் வலியுல்லாஹ் இற்கு பரிசலித்தார். அந்த இடமே Sakkaranwatta (Land of Rosary) என அழைக்கப்பட்டது.இது முன்னைய காலத்தில் Bothalagama or Bothalapitiya என்ற இடத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது என ஆசிரியர் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து ஆசிரியர் பின்வருமாறு தன் கட்டுரையை தொடர்கிறார்.
வலியுல்லாஹ்வின் மரணத்திற்கு பின் அவர் அந்த கித்துல் மரத்திற்கு அருகில் அடக்கப்பட்டார்.பிற்காலத்தில் அடக்க ஸ்தலத்திற்கு அருகில் ஓர் பள்ளிவாயலும் கட்டப்பட்டு மூவின மக்களும் தரிசிக்கும் ஓர் இடமாகவும் இந்த இடம் பிரசித்தி பெற்றது.காலப்போக்கில் இந்த இடத்தின் பெயர் Khatapitiya என மாற்றம் பெற்றது.
5 நூற்றாண்டின் பின் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் புகையிரத பாதை விஸ்தரிப்புக்காக குறித்த வலியுல்லாஹ்வின் அடகஸ்தலத்தை நீக்குமாறு ,புகையிரத விஸ்தரிப்புக்கு பொறுப்பான பிரித்தானிய பொறியியளாலர் கட்டளை இட்டதாகவும், பின் வலியுல்லாஹ் கனவில் தோன்றியதாகவும் உடனே மறு நாள் காலை குறித்த புகையிரத பாதையின் குறித்த போக்கினை மாற்றிவிட்டு தன் சொந்த செலவில் அடகஸ்தலத்தை சுற்றி கல் மதில் அமைந்ததாகவும் கூறி தன் கட்டுரையை நிறைவு செய்திருகிறார் ஆசிரியர்.
மேலும் கட்டுரையாளர் மேற்குறித்த தகவலிற்கு மேலதிகமாக 1347 இல் Arabian Traveler ஆன இப்னு பதூதா அவர்களின் சிறீ பாத யாத்திரைக்கான வரலாற்று முக்கியதுவம்வாய்ந்த வருகை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இப்னு பதூதா தன் குறிப்புகளில் இலங்கை பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதும் இன்றைய நாட்களில் நம் வரலாற்றை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
அத்தோடு 1896 இல் வெளியான Gazetter ல் மேற்குறித்த வலியுல்லாஹ்வின் அடக்க ஸ்தலம் அமையப் பெற்றுள்ள கஹட்டபிட்டிய பகுதி பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது இந்த இடத்தின் மகிமையை நமக்கு எடுத்துறைக்கின்றது.
மேலும் நம் வரலாற்றை பறை சாற்றும் அடக்கஸ்தலமானது இன்று வரை கஹட்டப்பிடிய பள்ளி நிர்வாகத்தினால் பாதுகாக்கபட்டு வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமே.
அவ்லியாக்களின் அடக்கஸ்தலம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படினும் அவையே இன்றைய நம் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் ஆவணம் என்பது சிந்திக்க கூடிய யாராலும் மறுக்க முடியாத உன்மை.
இதை அறிந்த அன்னியர்கள் குறித்த வரலாற்று ஆவணங்களை அழிக்க பல முறைகளில் முயற்சித்து வருகின்றனர்.இதில் 2012 அனுதாரபுரத்தில் வெற்றியும் கண்டுவிட்டார்கள்.இதுவே நம் பலவீனம் ஆகும்.
இனியாவது வேற்றுமைகள் மறந்து நம் இருப்பினை உறுதி செய்யும் விடயங்களில் ஒன்றுபட்டு நடப்பது காலத்தின் தேவையாகும்.
''அடக்க ஸ்தலங்கள் நம் இருப்பை பறைசாற்றும் ஆவணம்''
தற்போதைய குறித்த பள்ளிவாயலின் விலாசம்,
Kahatapitiya Jumma Masjid
268 Peradeniya - Badulla - Chenkaladi Hwy, Gampola, Sri Lanka
தகவல்கள் உதவி:
M.R Nazoordeen (J.P)
Eng. Zafnas Zarook
இன்ஸாஅல்லாஹ் தேடல் தொடரும்.
Hemmathagama, Madullbowa palli hauz wistharippin pothu Hijri 133,135 ena aandukal pathikkapppatta irandu meezan kallukal akappattu innum kaatchikku waikkappattullathu.
ReplyDeleteThanks bro for your information..
ReplyDeleteBy the way, as muslims what kind of connection we have with SivanoliPaada Malai?
ReplyDeleteEng. Zafnas Zarook,
ReplyDeleteஅடக்க ஸ்தலங்கள் etc. தேடி எடுத்துக் காட்டி “இருப்பினை உறுதி செய்வது” முக்கியமாகத் தெரியவில்லை. உண்மையான இஸ்லாத்தை தேடிப் படிப்பது, அது எதிர்பார்ப்பது படி வாழ்வது... இதனூடாக “இருப்பினை பாதுகாப்பது” முக்கியமாகவும் காலத்தின் தேவையாகவும் உள்ளது.
The Srilanka Muslim's history is so older than this history (1000, 700)
ReplyDeleteBut this is not the history but just a story...and there is no Holy Man drama in ISLAM.
So, please do not mix and do not try to mad Islamic community and do not support anyone by this kinds of fake stories....
ISLAM IS PURE WITH ITS OWN RIGHT PATH...!
bro farook fazil solluvadu unmaithan
ReplyDeleteIf there is no holy man. There is no Islam in Srilanka.They are the people who spread the Islam anyware weather it is north or south. Go dig yourself in the history.Howmany people knows that there is Muslim holy man kaburuadi inside Nallur Kandasamy kovil.Religous belief may change according to the interpretation.In Islam Allaha and Rasool other than that there different school of thought on other matters.accept the reality.only Allaha knows what is right and wrong.he is the only malikuyawmatheen.Every religion has different interpretations in chriianity Catholics,Methodist.in Hindhusam God Siva and God Rama.in Buddhism..Heenaya and Mahayana luckily in Islam one God one prophet but there are difference .we learn accept the reality.History is evidence by culture and culture refelection of events.Please don't devide Muslim and don't deny or distroy the history
ReplyDeleteMay Allah bless the writer , This is the truth, that our srilankan Muslim history should be documented and the only evidence for existence of muslim in this island Before 1000 yearsis these Awliyas, Any attempt to destroy or close these Holy places from Wahhabis with the allegation of SHIRK will bring disasters to our community.
ReplyDeleteஆதம் (அலை)அவர்கள் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து முஸ்லிம்களின் வருகை ஆரம்பிக்கின்றது
ReplyDelete