பெருநாள் அன்று தொழுதுவிட்டு, மது அருந்திய அசிங்கம் - ஒருவர் குத்திக்கொலை - 5 பேர் கைது
கிண்ணியா - மஹமாறு பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்த கத்திக்குத்து சம்பவத்தில் கிண்ணியா - மஹமாறு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முகம்மட் ஹனீபா இப்றாஹீம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையை நிறைவேற்றி விட்டு நண்பர்கள் சிலருடன் மஹமாறு மையவாடிக்கருகிலுள்ள வயல் வெட்டைக்கு சென்று பியர் அருந்தியுள்ளனர்.
இதன்போது அருகிலுள்ள வயலுக்குள் சிறிய குடிசையொன்று காணப்பட்டது. அங்கும் சக நண்பர்கள் சாராயம் குடித்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.
பியர் குடித்தவர்கள் குடிசையில் இருந்தவர்களிடம் சாராயம் கேட்டதையடுத்து இரண்டு குழுக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் குறித்த நபருக்கு கத்தியால் குத்தப்பட்டு அவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.
ஆனால் அவர் வெறியில் விழுந்து கிடக்கின்றார் என நினைத்து மற்றைய நண்பர்கள் தொடர்ந்து மது அருந்தியதாக கைது செய்யப்பட்ட நபரொருவர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் இன்றைய தினம் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திரும்பி வந்தவுடன் ஊரார் என்ன செய்ய போகிறீர்கள். சாராயம் குடித்ததற்கு?
ReplyDelete