பிரேசில் நாட்டு 2 பெண்கள், இஸ்லாத்தை ஏற்றபோது வடித்த ஆனந்தக் கண்ணீர் (வீடியோ)
பிரேசில் நாட்டு 2 பெண்கள் இரு இளம் யுவதிகள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்கின்றனர். ஏற்றுக் கொண்டவுடன் அவர்களிடம் இனம் புரியாத சந்தோஷம். அந்த சந்தோஷத்தின் மிகுதியால் அவர்களால் ஆனந்த கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் அழுகின்றனர். இஸ்லாம் மார்க்கமானது உலகளாவிய மார்க்கம். இது அரேபியருக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
----------------------------------
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர்காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 5:83)
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது. (அல்குர்ஆன் 17:109)
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்றுசொன்னார்கள். நான், "உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கேநான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஏனெனில் நான்பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான்அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "(முஹம்மதே!) ஒவ்வொருசமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச்சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும்(4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் "நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி)
Post a Comment