துருக்கிக்கு 15 பில்லியன் டொலர்களை வழங்குகிறது கட்டார்
கட்டாரும் துருக்கி மத்திய வங்கியும் பணப் பரிமாற்ற உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. டோஹா, துருக்கிக்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்து பல நாட்கள் கடந்த பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டார் மத்திய வங்கி அவ்வறிவித்தலை வெளியிட்டது.
இரு மத்திய வங்கிகளினதும் பணிப்பாளர்களால் கையொப்பமிடப்பட்ட இவ்வுடன்படிக்கை இரு பக்க நாணயப் பரிமாற்ற வழியினை ஏற்படுத்தும், இதன் மூலம் துருக்கியின் நாணயம் பலமடையும்.
ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான துருக்கிய லீராவின் பெறுமதி சுமார் 30 வீதம் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க மதகுருவான அன்ரூ புருட்சன் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அங்காராவின் வொஷிங்டனுடனான எதிர்கால நட்புறவினை சந்தேகத்திற்கிடமாக்கியுள்ளது.
துருக்கியில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளப்போவதாக கட்டார் அறிவித்துள்ளமையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அன்வர் கர்காஷ் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாகச் சாடியிருந்தார்.
பரஸ்பர ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் கட்டார் அமீர் 'பணி நிமித்தமான' விஜயமொன்றை மேற்கொண்டு துருக்கியை வந்தடைந்தார். பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதுள்ள தந்திரோபாயப் பிணைப்புக்களை மேலும் விரிவாக்குவதற்கான வழிவகைகள் மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் துருக்கிய ஜனாதிபதி தையிப் அதுர்கானுடன் ஷெய்க் தமீம் 'பிரத்தியேக' சந்திப்பில் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது துருக்கிய நிதிச் சந்தையிலும் வங்கிகளிலும் 15 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளப்போவதாக கட்டார் உறுதியளித்தாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க டொலருக்கு எதிராக துருக்கிய தேசிய நாணயமான லீராவின் பெறுமதி மிகக் குறைந்த பெறுமதி நிலையில் பதிவாகியிருப்பதிலிருந்து மீளவதற்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டார் முதலீடு தொடர்பில் அறிவித்த மறு நாள் லீராவின் பெறுமதி நான்கு வீதத்தால் அதிகரித்தது.
துருக்கிய இராணுவத் தளத்தினையும் துருக்கியப் படையினரையும் தனது மண்ணில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக கட்டார் வலுக்கட்டாயமாக முதலீடு செய்வதற்கான வாக்குறுதியை வழங்கியுள்ளதாக 'ஆய்வாளர்கள்' தெரிவித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவுக்கு நெருக்கமான ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கட்டாருக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்க வேண்டும்
ReplyDeletemr ajan antony appadiya sandosam valvadaram tede qatar ponavargal ellam terumbavendiyaduthan
ReplyDeleteஅன்டனி உன்ர பிரபாகரன்ட சொத்தையா கொடுக்கினம்..
ReplyDelete@saleem, அமேரிக்க-மேற்கு நாடுகளின் தலைமையின் கீழ் முழு உலகமே பயங்கரவாத்திற்கு எதிராக போராடும் போது எப்படி கட்டார் இப்படி பண உதவி செய்ய முடியும்?
ReplyDelete
ReplyDeleteAjan, loooosup payalatam
Ajan உனக்கு முடியுமானால் அநீதி நடக்கும் போது வாய் மூடியாவது இரு. அதற்கு support பண்ணாமல் இரு .இல்லை என்றால் இறைவனின் தண்டனை உண்னையும் அழித்து உண் சந்தியையும் நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டு விடும்.
ReplyDelete