11 வயது சிறுமியை பாலியல், வல்லுறவுக்கு உட்படுத்திய சட்டத்தரணி கைது - ஆராட்சிக்கட்டுவயில் அசிங்கம்
11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 52 வயதான நபரை ஆராச்சிக்கட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டு - ரஜகந்தஹெலுவ பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி இந்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறுமியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயனிக்கும் போது அணியும் தலைகவசம் ஒன்றை வாங்கி வருமாறு கூறி, சிறுமியை சந்தேக நபரின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
அப்போது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள சந்தேக நபர், இது குறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனக் கூறி, சிறுமிக்கு 100 ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் மூன்று வாரங்களுக்கு பின்னர், சிறுமி தான் எதிர்நோக்கிய சம்பவத்தை தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய், ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர், சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 வயதுச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த லட்சணத்தில் காதி நீதிவான்களாக சட்டத்தரணிகளை நியமித்தால் என்ன நடக்கும்?
ReplyDeleteமேற்படி சட்டத்தரணி சிங்கள சமூகத்தை சேர்ந்தவராக இருப்பினும் முஸ்லிம் திருமண சட்டத்தில் காதியாக சட்டத்தரணிகளையும் நியமிக்க வேண்டும் என்பதே ஐரோப்பியரின் பணத்துக்கு விலைபோன முஸ்லிம் விலை மாதுக்கள் சிலரின் கோரிக்கையாகும்.
பொதுவாக சட்டத்தரணி என்பதால் நாளை முஸ்லிம் அல்லாத சட்டத்தரணிகளும் நியமிக்கப்பட சட்டம் வழிசமைக்கும் என உலமா கட்சி 2012ம் ஆண்டிலேயே பகிரங்கமாக சுட்டிக்காட்டியது.
சட்டத்தரணிகள் சிலர் பணத்துக்காக பொய் பேசுபவர்களாகத்தான் கண்டோம். இப்படி 11 வயதுச்சிறுமியையும் என்றால் காதிகளாக நியமிக்கப்பட்டால் பெண்களின் நிலை என்ன?