Header Ads



10 நாட்களுக்கு இறைச்சி, கடைகளை மூடவேண்டும்

-Hafeez-

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு வருடம் தோரும்  இடம்பெற்று வரும்  வரலாற்று முக்கியம் வாய்ந்த எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி நகரிலும்  சூழவுள்ள பிதேசங்களிலும் இறைச்சிக் கடைகள் மதுபாண சாலைகள் மீன் கடைகள் ஆகியற்றை எதிர்வரும் 16 ம் திகதி முதல் 26 ம் திகதி வரை மூடி விட கண்டி மாவட்டசெயலாளர் எச்.எம்.பீ ஹிட்டிசேக்கர உத்தரவிட்டுள்ளார். 

கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே, கண்டி மாவட்ட செயலாளர்  மற்றும் நான்கு தேவாயங்களில் பஸ் நாயக்க நிலமே மார் உள்ளிட்ட பெரஹரா குழு இத் தீர்மானத்தை எடுத்துள்ளது. 

இக் காலப்பகுதியில் கண்டி பேராதனை கட்டுகஸ்தோட்டை தென்னகும்புர நத்தரம்பொத்த போன்ற பகுதிகளில் இவ் வியபாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ம் கிதகி கப் நடுவதன் மூலம் பெரஹரா  நிகழ்வுகள் ஆரம்பிக்க உள்ளதுடன் 16 ம் திகதி முதல் பெரஹரா வீதி வலம் வர உள்ளது. எதிர்வரும் 26 ம்திகதி பகல் பெரஹரா மற்றும் தீர்த்த உற்சவம் (நீர்வெட்டு) உடன் இவ் வருட பெரஹர நிகழ்வுகள் நிறைடைய உள்ளன.

4 comments:

  1. உண்மையான மத நடவடிக்கைகள் செய்யும் போது நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கு எந்தவிதமான தடைகள் இருக்கக்கூடாது,இவெங்கல் செய்றவேலையால் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகம் தான் நிறைய இருக்கின்றன.மாட்டு ,ஆட்டு ,கோழி,மீன் வியாபாரிகளுக்கு பாரிய நாட்டமும் அதனடிப்படையில் அரசுக்கு வரி வருமானமும் ,எத்தனையோ பேரின் தொழிலின்மை இன்னும் எத்தனையோ கஷ்டதுன்பங்கள்.

    ReplyDelete
  2. முட்டாள் தனத்திற்கு மருந்தில்லை. தாவரங்களுக்கும் உயிர் உண்டு. ஆகவே அவற்றையும் உண்ணக்கூடாது.

    ReplyDelete
  3. முடிய முடிய இன்னொன்றாய்
    முழு நாட்டிலும் ஒவ்வொன்றாய்
    முழுவருடமும் பெரஹரா நடந்தால்
    முழு மது விலக்கை அமுலாக்கலாமே!

    முடியாத கஷ்டத்தைக் கொடுக்காது
    முடியிலாத் தலையைப் பாவித்தேனும்
    முடிந்தால் இதனைச் செய்யுங்கள்
    முழு நாடுமே பாராட்டும் உங்களை!!

    ReplyDelete
  4. ஆடு நனைகிறது என்று ஒ நாய் அழுகிறது

    ReplyDelete

Powered by Blogger.