தே.அ.அ. பெறுவதற்கு 100 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்
இலங்கையில் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிடப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் போது 100 ரூபா பணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மக்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் அமைச்சர் எஸ்.பீ.நாவின்னவின் கையொப்பத்துடன் தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய 2018.09.01 திகதி முதல், பதிவு செய்தல் மற்றும் முதன் முறையாக தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்போர் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் 2018.09.01 திகதி முதல் தேசிய அடையாள அட்டை நகல் எடுப்பதற்காக அறிவிடப்படும் பணம் 500 ரூபாவாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment