Header Ads



முஸ்லிம் Mp களும், ஜம்மியத்துல் உலமாவும் மட்டும் கலந்துரையாடினால் சரியா..?


முஸ்லிம் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பிணர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை(24) கலந்துரையாடும்போது முஸ்லிம் பெண்கள் அமைப்பினர், மற்றும் இத்துரையில் முஸ்லிம் பெண்கள் விவகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண்கள் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும்.  என முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் இன்று(23) வெள்ளவத்தையில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ் ஊடக மாநாட்டில் சட்டத்தரணி சபானா குல் பேகம், சட்டத்தரணி கசானா சேகு இஸ்ஸதீன், பிஸ்லியா பூட்டோ
(முஸ்லிம் விவாக, விவாகரத்து மறுசீரமைப்பு குழு உறுப்பினர்)  மற்றும் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி  நம்பிக்கையகம், பிரநிதி ஜூவைரியாஈ,  மன்னார் மத்திய அபிவிருத்தி ஒன்றியம் என். றஸ்மியா ஆகியோறும் கருத்து தெரிவித்தனர்.


30 ஆண்டுகளுக்கு மேலாகப் பெண்கள் அமைப்புக்களும் முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டத்தினால் பாதிக்க்பட்ட பெண்களும் பல கட்டங்களிலும் பல தளங்களிலும் அச்சட்டத்தின் குறைபாடு பக்கசார்பு மற்றும் பாரபட்சம், சார்;ந்து குரல் எழுப்பியவர்கள் என்ற வகையில்  கடந்த 9 வருடங்களாகக் கிடப்பிலிருந்து அறிக்கை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் பல தளங்களில் முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் “இது அரசின் கடப்பாடு மற்றும் பொறுப்பு என்பதோடு  அவர்களினாலேயே மறுசீரமைபபினை நீதியமைச்சர் மூலம் சட்டவாக்கம் செய்ய வேண்டும்.  என்று கோரிக்கை விடுத்த போதும்  நீதியமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் முஸ்லிம் ஆண் பராளுமன்ற அங்கத்தவர்களது தீர்மானத்திற்கு மட்டும் இம் மறுசீரமைப்பினைக் கையளித்தமை மிகவும் மன வருத்தத்திற்குரிய விடயமாகும். 24ஆம் திகதி ஜூலை மாதம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் மட்டு;ம் கலந்துரையாடுவதனால் பெண்கள் சார்பாக எவ்வகையான முடிவுகளும் எடுக்க்பபடும் என்பது எங்களுக்கு கேள்வியாக உள்ளது.

மலேசியா மற்றும் முஸ்லீம் நாடுகளில் பெண் காலியாhகள் பதவி வகிக்கின்றனர். அத்துடன் முஸ்லீம் பெண்கள் உயர் நீதி மன்ற மாவட்ட நீதிபதியாகவும் இலங்கையில் பதவி வகிக்கின்றனர் ஏன இதுவரை முஸ்லீம் பெண் சட்டத்தரணிகள் காதிநீதிபதியாக வரமுடியாது? அத்துடன் காதி மன்றத்தில் பெண்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சட்டத்தரணிக்ள ஆஜராக வேண்டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இச் சட்டத்தில் போதிய நிவாரணம் இல்லை. அத்துடன் முஸ்லிம் பெண்களது திருமன வயது ஆக்ககுறைந்தது 18வயது நிர்ணயிக்கப்படல் வேண்டும். 

நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை முஸ்லிம் நியாயாதிக்கம் மற்றும் இஸ்லாமிய வரைமுறைகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஷரிஆ சட்டத்து நடைமுறைகளையும் உள்வாங்கியே காணப்படுகின்றது. 

ஆகையால் நீதியமைச்சர் அவர்களிடம் வேண்டி கொள்வது யாதெனில்,  பல வருடங்களாகக் கிடப்பிலிருந்த மறுசீரமைபபை முன்நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கையும் காலவரையறையையும் துரித கதியில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் நீதியரசர் சலீம் மர்சூக்கின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை எவ்வகையிலும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அநீதி இழைக்காத  முறையில் துரித கதியில் இவ் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தினை முஸ்லிம் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிவாரணம் அளிக்கும் வகையில்  சட்டத்தினை மறுசீரமைத்து பாராளுமன்றததில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

(அஷ்ரப் ஏ சமத்)

23 comments:

  1. கிளம்பிட்டாங்க.சமூகத்தை மேலும் கொச்சைப்படுத்த

    ReplyDelete
  2. I m delighted to see that our ladies have come to maithenstream.

    SL government should take necessary action to include this ladies recommendation.

    ReplyDelete
  3. ஜம்மியத்துல் உலமாவைக் கழட்டி விட்டு, வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்தாலோசிப்பது, முஸ்லீம் பெண்கள் அமைப்பிற்கு பயன் அளிக்கும்.

    முஸ்லீம் பெண்கள் அமைப்பு போன்ற முகவரியற்ற அமைப்புகளின் பின்னால், சியோனிச சக்திகள் இயங்குகின்றன.

    ReplyDelete
  4. I m delighted to see that our ladies have come to maithenstream.

    SL government should take necessary action to include this ladies recommendation.

    ReplyDelete
  5. இந்த விவகாரம் பற்றி கண்டிப்பாக பெண்களின் கருத்து பெறப்பட வேண்டும். காலம் கடந்தாவது பெண்கள் முன்வந்து சரீஆத் தொடர்பாக கலந்தாலோசிக்கவும் அவர்களின் கருத்துக்களை முன்வைக்கவும் வந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அவர்கள் மேலே குறிப்பிடும் விடயம் மிக முக்கியமானமாகும். மேல்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் சட்டஅறிக்கையை காலதாமதமின்றி சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்ற விடயம் மிகவும் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதுமாகும். எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  6. Some lady lawyers who claim to be members of certain NGOs does not mean they represent the whole Muslim women in Sri Lanka. They can voice their views but if there are other Muslim women organizations then their views should also be considered. I think there are many educated Muslim women in the country. They should also come forward and make their comments on this issue.

    ReplyDelete
  7. Adney - What is maithenstream?

    ReplyDelete
  8. இந்த பெண்கள் அமைப்புடன் ஐம்இய்யத்துல் உலமா பல கலந்துரையாடல்களை நடாத்தி தானே இருக்கின்றார்கள்.

    இவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கித்தானே இருக்கின்றார்கள்.
    அப்படி இருந்தும் ஏன் இப்படி அடம் பிடிக்கின்றார்கள்.

    இவர்களை இவ்வாறு துள்ளவைக்கும் இஸ்லாமிய விரோதிகளின் கையிலிருந்து எப்போது விடுபடுவார்களோ!

    பணத்தின் மோகம் இவர்களை குறுடர்களாகவும், செவிடர்களாகவும் மாற்றி விட்டதோ!!!

    ReplyDelete
  9. Adney - What is maithenstream?

    ReplyDelete
  10. Sampathan, it was a error occurred when I typed the content. I hope you may understand the fact.

    ReplyDelete
  11. We to be vigilant on this Ladies NGO, this might be a Consipiracy of certain Western terrorist organizations like USA and Isreal etc.

    ReplyDelete
  12. குறித்த அமைப்பினர் இன்னும் சுமூகமான கலந்துரையாடளுக்கு acju வுடன் செல்லவில்லை என நினைக்கிறேன்.


    ஆனால் மு. த ச பற்றிய acju வின் பரிந்துரைகள் வெளியிடப் பட்டுள்ளது.

    ReplyDelete
  13. படைத்த இறைவனுக்கும் பெற்ற தாய் தந்தைக்கும் தெறியும் பிள்ளைகளுக்கு எப்போது திருமணம் செய்து வைக்கவேண்டுமென்று இதை முடிவெடுக்கும் அதிகாரம் வேறு யாருக்கும் கிடையாது

    ReplyDelete
  14. I think this is very reasonable. I would like to ask those who are discussing MMDA is SM, whether you have discussed the implications of the existing MMDA with the women at your home. Have you given them a reasonable assurance to put forward what they really think and feel, without fear mongering them with argument like MMDA = SHARIA and Supporting changes to MMDA = Hellfire. Some demands by these lawyers may be not correct, may Allah forgive them and forgive us for making our women's life so difficult by being systemically unjust.

    I would like to support changes to the MMDA, that would better protect the civil rights of men and women of our community whilst adhering to the essence of sharia principles.

    ReplyDelete
  15. Ravdihal came out. This so -call women organisations want some court cases. That is why the need this kind of arguments

    ReplyDelete
  16. Subject in this matter affects the Muslim women. Therefore Muslim women's input should be obtained whether they are Lawyers or any other ordinary woman.

    ReplyDelete
  17. I don't wanna comment anything but Take a look at the picture itself (If this Picture is Legit) , It talks alot where who claimed raise their Voice on-behalf of entire Muslim Women.

    ReplyDelete
  18. உண்மையிலே இன்று பெண்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை யாரும் மறுக்கவில்லை இதனை நம் சமூகத்தில் உள்ள அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் முன்வந்து அவர்களுக்கான தீர்வை பெறவேண்டும். அதற்க்காக உலமாக்களை ஷரீஅத்தை குறை கூறுவதும் ஷரீஅத்தை புறம் தள்ளிவிட்டு தீர்வை தேடுவதும் அறிவீனமாகும். இவ்வாறான செயல்பாடுகளால் இந்நாட்டில் நமக்கு இருக்கும் உரிமைகளை நாமே இழக்க நேரிடும்

    ReplyDelete
  19. உலகத்தின் போக்கு அறியாமல் உலக பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி புரியாமல் இஸ்லாமிய விடயங்களில் தீர்ப்பு வழங்க முற்பட்டால் இஸ்லாத்தை இறுதியில் நூதனசாலையில் தான் காணக்கிடைக்கிடைக்கும். எனவே உலகம் தெரிந்தவர்களுடன் ஆலிம்கள் சபை சேர்ந்து போவதுதான் எக்காலத்திற்கும் இஸ்லாம் பொருத்தமானது என்பதை வௌிக்காட்ட உதவும். இல்லாவிடில் காட்டு வாசிகள் அல்லது குகைவாசிகள் பின்பற்ற மட்டும் பொருத்தமானதாக போய்விடும். மதவாதியாக இல்லாமல் மார்க்கவாதியாக இக்கருத்தினைப்பதிவிடுகின்றேன். முடியுமென்றால் மார்க்கவாதியாக இதனை வாசித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  20. உலகத்தின் போக்கு அறியாமல் உலக பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி புரியாமல் இஸ்லாமிய விடயங்களில் தீர்ப்பு வழங்க முற்பட்டால் இஸ்லாத்தை இறுதியில் நூதனசாலையில் தான் காணக்கிடைக்கிடைக்கும். எனவே உலகம் தெரிந்தவர்களுடன் ஆலிம்கள் சபை சேர்ந்து போவதுதான் எக்காலத்திற்கும் இஸ்லாம் பொருத்தமானது என்பதை வௌிக்காட்ட உதவும். இல்லாவிடில் காட்டு வாசிகள் அல்லது குகைவாசிகள் பின்பற்ற மட்டும் பொருத்தமானதாக போய்விடும். மதவாதியாக இல்லாமல் மார்க்கவாதியாக இக்கருத்தினைப்பதிவிடுகின்றேன். முடியுமென்றால் மார்க்கவாதியாக இதனை வாசித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  21. இங்கு mic சிற்கு முன்னுள்ளவர்களின் கணவன் மாருக்கு தேய்ந்த செருப்புக்களை அவித்து பருகக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  22. suhaib - உலகத்தில் தோன்றிய மதங்கள் எல்லாம் நூதனசாலையில்தான் மிஞ்சும் - இஸ்லாத்தை தவிர.

    எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானதுதான் இஸ்லாம்.

    இஸ்லாம் ஒரு மதம் அல்ல. அது ஒரு மார்க்கம்.

    மார்க்கம் என்பது, குர் ஆன், சுன்னா என்ற வழிமுறைகளைத் தழுவியது.

    அதற்குள் நின்று, கருத்தைச் சொல்லுங்கள்.

    இந்த பெண்கள் அமைப்பும், மார்க்கத்தின் அடிப்படையில் ஒன்றுமே சொல்வதில்லை.

    சொல்வதற்கும் தெரியவில்லை.

    ReplyDelete
  23. If ACJU can discuss with poli Dr Nusran Binnoori, why can’t they engage with these ladies organisations???

    ReplyDelete

Powered by Blogger.