Header Ads



பாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)


(எம்.சி.நஜிமுதீன்)

அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா? என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

பொரள‍ை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதாள உலகக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அமைச்சர் ஒருவர் பற்றி நேற்று ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. அது குறித்து பாராளுமன்றிலும் விவாதம் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச அது குறித்த தகவல்களை பாராளுமன்றில் எடுத்துரைத்தார். 

அத்துடன் முன்னாள் பொலிஸ் சேவையில் கடமையாற்றி தற்போது பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிப்பவர் ஒருவர் அமைச்சர் சரத் பொன்சேகா கலந்துகொள்ளும் வைபவங்களில் கலந்துகொண்டுள்ளார். அதற்கான ஆதராங்களும் உள்ளன.

மேலும் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக் குழுக்களில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர் உள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பியதுடன் அது நிரூபிக்கப்பட்டாடல் தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆகவே பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் உள்ள அமைச்சர் ஒருவரை நாம் தற்போது வெளிப்படுத்தியுள்ளோம். எனவே அண்மையில்  கேரள கஞ்சாவுடன்  கைதுசெய்யப்பட்ட கிஹான் சந்தருவனை விடுவிக்குமாறு யார் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தது? அத்துடன் அமைச்சர் ஒருவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புள்ளதாக தகவல் வெளியிட்ட செய்தி இணையதளம் மீது குறித்த அமைச்சரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எமக்குத் தெரியவருகிறது.

எனவே அமைச்சர் சரத் பொன்சேகாவுடன் இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரை கைதுசெய்வீர்களா என பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் அமைச்சர் சரத் பொன்சேகா பாதாள உலகக் குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பாராயின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா என சட்டம் ஒழுங்கு அமைச்சரிடமும், அமைச்சு பதிவிலிருந்து அவரை நீக்குவீர்களா என பிரதமரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.


No comments

Powered by Blogger.