"விக்னேஸ்வரனையும், விஜயகலாவையும் நீக்கமுடியும்.."
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு உண்டு எனவும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலைப் பெற்று ஆளுநர் அதைச் செய்ய முடியும் எனவும் சட்டத்துறை வல்லுநர் பிரதீபா மஹநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையிலேயே வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் பதவியை முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ பறித்தெடுத்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமான மவ்பிம வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் சட்டரீதியாக சவால்களை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாக மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அவர்களின் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் காணொளிப் பதிவுகளைத் திரட்டி சட்டரீதியாக ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூர்யவிடம் முன்வைக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதாரவாகப் பேசுவதும் நாட்டின் ஒற்றுமைக்கு சவால்விடுவதும் அரசியலமைப்பை கடுமையாக மீறும் செயலாகும்.
விஜயகலா விவகாரத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
அவரை நீக்க முடியுமாயின் அதே குற்றத்தைச் செய்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவியிலிருந்து நீக்க முடியும்.
நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.அமிர்தலிங்கம், வி.தர்மலிங்கம், வி.என். நவரட்ணம் மற்றும் எஸ்.சிவசிதம்பரம் ஆகியோர் 1987ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் திகதி தமது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டனர் என்று சட்டத்துறை வல்லுநர் பிரதீபா மஹநாம ஹேவா தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட வல்லுநர் பிரதீபா அவர்களே,
ReplyDeleteஇனவாதி விக்கியின் பதவியைப் பறிக்கும்போது, நமது ஹக்கீமின் பதவியையும் சேர்த்து பறித்து, வீட்டுக்கு அனுப்புங்கோ.
உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும்.
சட்ட வல்லுநர் பிரதீபா அவர்களே,
ReplyDeleteஇனவாதி விக்கியின் பதவியைப் பறிக்கும்போது, நமது ஹக்கீமின் பதவியையும் சேர்த்து பறித்து, வீட்டுக்கு அனுப்புங்கோ.
உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும்.
அடி அம்மா பிரதீபா மகாநாம ,
ReplyDeleteஎன்ன புத்தி கித்தி மழுங்கி போச்சா. சிவசிதம்பரம் மற்றும் ஏனைய தமிழர் உரிமை மறுப்பின் பிரதிபலன் என்னவென்று நான் கூறி அறிய வேண்டுய அவசியம் இல்லை. புலிகள் இருக்கும் போது 13ஆம் சீர் திருத்தம் அந்த திருத்தம் இந்த திருத்தம் தமிழர்களுக்கென தனியான ஆட்சி அதிகாரம் என்று கூறிய இலங்கை அரசு இன்று தமிழர்களின் உரிமையை மறுக்கின்றார்கள். மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள் அதிகாரம் தருகின்றோம் என கூருகின்றார்கள். இதை கொஞ்சம் ஒரு சட்ட வல்லுநர் என்ற ரீதியில் தட்டி கேட்கலாமே. மீண்டும் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினால் அது தமிழர்களின் தவறு என உளறிவிடபோகிண்றீர்கள்.
ரணில்/மைதிரி சார்களே, உடனடியாக பிரதீபா-வை “பதவி நீக்கும்” அமைச்சராக நியமியுங்கள்.
ReplyDeleteபிரதீபா அவர்களே, நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மகிந்த வின் காலில் விழுந்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி பிழைத்த றிசாத்-யை பதவியில் இருந்து நீக்குங்கள்.
ரணில்/மைதிரி அவர்களே, உடனடியாக பிரதீபா-வை “பதவி நீக்கும்” அமைச்சராக நியமியுங்கள்
This is his opinion and there are so many counter argument against this. However, northern province is doing nothing and this PC can be dissolved.
ReplyDeleteஅட்றா சக்கை என்டானாம்.
ReplyDeleteRacist Vicky should be thrown out from CM post.
ReplyDeleteRacist Vicky will be cleaned bowled soon.
Governor of North has full power to kick the Racist Vicky out.
ReplyDeleteNorthern Province should be dissolved and it’s members who are in support of division of country should be banned to contest in future elections.
ReplyDeleteStna, please read Muni Mulafers aricle and Noor Nizams comments before you put comments about others.
ReplyDelete