Header Ads



தமிழ் படங்களில் உள்ளவாறு, வடக்கில் நிலைமை மோசம் - மஹிந்த

மீண்டும் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாடுள்ள இடத்தில் நல்லிணக்கத்துக்கு இடமில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்தார்.

வடக்கில் இன்று சட்டம் இல்லை. பொலிஸார் பாதையில் இறங்கி நடமாட முடியாது. தென் இந்திய திரைப்படங்களில் உள்ளவாறு அங்கு சமூகமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையை நிருவகிக்க அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கு முடியாமல் போயுள்ளது.

இந்த நாட்டில் உண்மையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது எமது அரசாங்கம். நாம் 12500 எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்தோம். இன்று அவர்கள் பொலிஸில் சிவில் பாதுகாப்பு பிரிவில் சேவை புரிகின்றனர். உண்மையான நல்லிணக்கம் என்பது இதுவாகும்.

வடக்கில் விஜயகலா கூறிய கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால் இவ்வளவுக்கு அவர் கைது செய்யப்பட்டிருப்பார். நாட்டின் சட்டம் என்பது ஒன்று. கட்சியின் சட்டம் என்பது வேறு ஒன்று. கட்சியின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முன்னர் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

4 comments:

  1. ஆமாம் உண்மைதான் அதட்கு காரணம் போதை பொருள் பாவனையே. கடைசியாக வட மாகாணத்தில் நடைபெற்ற சகல கொலை கொள்ளைக்க்கும் காரணம் போதையே தவிர வேறெந்த காரணமும் இல்லை. நீங்கள் தானே அதை திட்டமிட்டு வட மாகாணத்தில் பரப்பியுளீர்கள. இதட்கு ஒரே தீர்வு வட மகாநதிட்கென போலீஸ் படை பிரிவொன்று நிறுவப்படல் வேண்டும். அது வட மாகாண சபையின் கீழ் இயங்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட ஆடவடியை குறைக்க முடியாது. இந்த சமூக சீரழிவுக்கு அரசு தன ஒட்டு மொத பொறுப்பு.

    ReplyDelete
  2. உங்கள் ஆசை நிறைவேறி வருகிறது வடகிழக்கு மக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுத்தி இலகுவாக தென் பகுதியில் வெற்றி பெறவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. *வித்தியா கொலை வழக்கிலிருந்து சுவிஸ் குமாரை தப்பிக்கவிட முயன்ற கேசுயிருந்து எப்படி விஜயகலா தப்பித்தார்? - ரணில் திருவிளையாடல்.

    *ஞானசேர சாரு எப்படி holidays க்கு போற மாதிரி ஜெயிலுக்கு போறாரு-வாறாரு? - மைதிரி/மகிந்த திருவிளையாடல்

    *மன்னார் நீதிபதி கொலை மிரட்டல் வழக்கில் இருந்து எப்படி றிஷாத் பதியுத்தீன் தப்பித்தார்? - மகிந்த திருவிளையாடல்.

    இப்படி யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆளுக்கு ஒரு சட்டம் இங்கே.
    இப்ப ...இவரு புதுசா கேட்கிறாராம்.. ம்ம்...

    ReplyDelete
  4. @Chandraball and Ajan Antonyraj:
    உங்கள் கருத்துக்கள் மிகவுண்மை.
    மக்ந்த தமிழ் படம் பார்ர்கும் வழக்கமுள்ளவரென்பதை நிருபிக்க இந்த செய்தியும் ஆதாரமானது, அவருக்கு தமிழ் படங்கள்தான் நல்ல விருப்பமாம்.

    ReplyDelete

Powered by Blogger.