Header Ads



விஜயகலாவுடன் ஒரேமேடையில் ரணில் - கூட்டு எதிர்கட்சி கடும் விமர்சனம்

விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறிய விஜயகலா மஹேஷ்வரனை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தூக்கிப் பிடித்து, ஊடகங்களை தூற்றும் அளவுக்கு பிரதமர் துணிந்துள்ளார் என கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சிங்கள ஊடகமொன்றில் வெளியான செய்திக்கே இவ்வாறு பிரதமர் தூற்றியுள்ளதாக கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையி லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு ஏசும் பிரதமர், விஜயகலாவின் அறிவிப்பு தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவுக்கு அவரை அழைத்து வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டாரா? என்றே நாம் பிரதமரைக் கேட்கின்றோம்.

No comments

Powered by Blogger.