Header Ads



கருணாவுக்கு உணவளித்த ரணில் - வெளிநாட்டுக்கு ஓடிய அலிஸாஹிர் மௌலானா

தற்போது இராஜாங்க அமைச்சராகவிருக்கும் அலிஸாஹிர் மௌலானா ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படுகின்ற கருணா அம்மானை கொழும்பிற்கு அழைத்து வந்து ஜெய் ஹில்ட்டனில் தங்க வைத்து அலரி மாளிகையில் இருந்து கருணாவிற்கு உணவளித்தவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரித்தெடுத்தமை மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ரணிலே கருணாவை கொழும்பிற்கு அழைத்து வந்து அவருக்கு அலரி மாளிகையில் இருந்து உணவளித்தார், இதற்கு உதவியதன் காரணமாக அலிஸாஹிர் மௌலானாவிற்கு அப்போது அமைச்சுப் பதவியை கைவிட்டு வெளிநாடொன்றுக்கு சென்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொண்டதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அரச நிதியில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தது யார்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவரது ஆலோசகர் பாஸ்கரலிங்கம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுமே அரச நிதியில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தனர் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. UNP ஐ தோற்கடிப்பதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்தது யாரோ?

    ReplyDelete
  2. UNP ஐ தோற்கடிப்பதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்தது யாரோ?

    ReplyDelete

Powered by Blogger.