Header Ads



திருந்தாத குற்றவாளிகளை, தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை - கார்தினால் மெல்கம்

சிறையில் போடப்பட்டதன் பின்னரும் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாயின் அவர்களை தூக்கு மேடைக்கு எடுத்துச் செல்வதில் தவறில்லையென காதினல் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் உள்ளனர். நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது. போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது.

அதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல.

குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை எனவும் காதினல் மெல்கம் ரஞ்சித் மேலும் கூறியுள்ளார்.

2 comments:

  1. 5:33 اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِ‌ؕ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا‌ وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ‏ 
    5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.*(இந்த நாசகர செயல்களை செய்து பூமியில் வாழ்பவர்களுக்கு பலமுறையிலும் தீங்கை ஏற்படுத்தும் சக்கிகளுக்கு அல்லாகு விதித்துள்ள முதல் தண்டனை இதுதான் மேலும் இந்த விடயத்தில் எந்த மததில் உள்ளவருக்கு விதிவிளக்கில்லை அனைவருக்கும் ஒரே தீர்வுதான், இவர்களை பொதுமன்னிப்பு கொடுத்து வெளியில் விட்டால் அவர்களை எந்த தீங்கில் இருந்து தடுப்பதற்று சிறைபிடிக்கப்பட்டார்களோ அதே தீங்கிற்கு மீண்டும் சென்றுவிடுவர்கள் அதை அல்குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.

    ReplyDelete
  2. *அவர்களை வெளியில் விடும்வரை பலபொய்களை சொல்லி நடிப்பார்கள் பின்பு அவர்களை விடுதலை செய்தபின் அவர்களின் பழய தொழிலுக்கு திரும்பிவிடுவர்கள்*
    6:28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ 
    6:28. எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.

    ReplyDelete

Powered by Blogger.