Header Ads



இலங்கை ஹஜ் பயணிகளுக்கு, சவூதியில் கிடைக்கும் அதிரடிச் சலுகை

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இலங்கையின் யாத்திரிகர்களுக்கு சலுகைகள் அடங்கிய விசேட சிம் அட்டைகளை வழங்குவதற்கு சவூதி அரேபியாவின் தொலைத்தொடர்பு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சவூதி அரேபியாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ள ஜெட்டாவில் உள்ள சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள், இந்த சிம் அட்டைகள் மூலம் தமது சக யாத்திரிகர்களுடன் இலவசமாக உரையாடவும், இலங்கையில் உள்ள தமது உறவுகளுடன் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தவும் இந்த சிம் அட்டையில் சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 100 மெகா பைட் இணையத்தள சேவை வசதிகளும் இந்த சிம் அட்டையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிம் அட்டைகளை கொழும்பில் வைத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரக காரியாலயத்தின் டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. மிகச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். முன்பு நாம் தேடிச் சென்ற வியாபாரம் காலடிக்கு வந்து சேவை என்ற பெயரில் நம்மைச் சுரண்ட ஆரம்பித்துள்ளது.அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. Anything which involves money is a business for the people who run it. It's not acceptable if they charge exorbitantly.

    ReplyDelete

Powered by Blogger.