மல்வானையில் ஏற்பட்டுள்ள புரட்சி - ஏனைய முஸ்லிம் ஊர்களுக்கு சிறந்த முன்மாதிரி
மல்வானை முழுதும் நேற்று வியாழன் இரவு
அனைத்து இடங்களிலும்
இதுவரை கண்டிராத வகையிலான
சுவரொட்டிகள் மல்வானை முழுதும் காணக்கிடைத்தது.
"மல்வானையை அழிக்கும் போதையை ஒழிப்போம்"
"நாளை உங்கள் குழந்தைகளும் போதைக்கு அடிமையாகலாம்
மல்வானை மக்களே விழித்துக்கொள்ளுங்கள்"
என்ற வாசகத்துடன்
மிக ஆழமான அர்த்தம் கொண்ட
கார்டூனும் அதில் உள்ளடங்கியிருப்பதனை
காணக்ககூடியதாகவிருந்தது.
போதைப் பொருளினூடாக வரும்
ஆபத்தையும் சீரழிவையும்
மணித்தியாலக்கணக்கில் சொற்பொழிவு மூலம் சொல்வதனை விட
இப்படியான கார்டூன் சித்திரங்களுடாக
சொல்வது மிகவும் தாக்கமுள்ளதாக இருக்கும்.
பார்ப்பவர்களின் ஆழ்மனதில் பதியவும்
இலகுவாக இருக்கும்.
சிறுவர்கள் பெரியார்கள் என்ற பாகுபாடு இல்லாமல்
எல்லோரும் நின்று நிதானித்து
இந்த சுவரொட்டி என்ன சொல்ல வருகிறது என்பதனை
புரிந்துகொள்ள முயற்சிப்பதனை காண முடிந்தது.
சிங்கள சகோதரர்கள்
இச்சுவரொட்டியை காட்டி
இதில் என்னவிருக்கிறது
இதில் என்ன தமிழில் இருக்கிறது
கேட்டு தெரிந்துகொள்வதனையும் காண முடிந்தது.
பியகம் பொலிஸாரும்
இந்த விழிப்புணர்வு செயற்பாட்டை பாராட்டி
இந்த சுவரொட்டியில் தமது இலக்கத்தையும்
பதிந்திருக்கலாமே
என்று
கேட்டிருந்ததாக
தெரிய வந்தது
இந்த முயற்சிகள் இத்துடன் நின்றுவிடாமல்
இவ்வாறான விழிப்புணர்வுகள்
புதிய புதிய முறைகளில் இன்னும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த சுவரொட்டியில் இதனை ஏற்பாடு செய்தவர்களின்
பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
ஆனால்
மல்வானை முழுதும் செல்வாக்கு கொண்ட
பல இளைஞர்கள் இயக்கங்கள், அமைப்புக்கள்
பல உள்ளன
அவ்வியக்கங்களும் கட்டாயம்
இவ்வாறான நடவடிக்கைகளில் களமிறங்கி
செயற்பட வேண்டும்.
மல்வானை
நமது ஊரில் இப்படி முக்கியமான
பிரச்சினை ஒன்றில்
மல்வானை இளைஞர்கள் அமைப்புக்கள்
கவனம் செலுத்தாவிட்டால்
அவ்வியக்கங்களுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தும்
அர்த்தமில்லை.
ஆகவே அவர்களும் கட்டாயம்
இந்த விழிப்புணர்வை
தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டும்
அதற்கான தனியான பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மக்களுக்கு, மாணவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த
இதுவும் ஒரு சிறந்த முறை.
இந்தப் பணியை செய்தவர்கள்
நிச்சயம் அல்லாஹ்வின் அருளுக்கும்
மக்களின் பாராட்டுக்கும் உரியவர்கள்.
அவர்களுக்காக நாங்களும் பிரார்த்திப்போம்.
(மல்வானை மக்கள்)
tamil sinhalam rendu basail erunda nalla erukkum
ReplyDeleteஇன்னொருவர் செய்யும் விதத்தை குறை கூறாது இந்த விடயம் பலனை தரும் என்று எழுதுங்கள் யார் எதன் மூலம் திருந்தினார்கள் என்பதை அந்த திருத்தத்தை ஏற்படுத்திய அல்லாஹ் அறிவான்,
ReplyDeleteExcellent praiseworthy effort.We Muslims come forward participate worthy cause to save not only our community all citizens from these types of habits from us .Better to joint with other communities and government and non government organisations. We use it for coexistence and uplift our participation. It will erase the misunderstanding already other have thinks Muslim's not participate still they try to be visitors they majority not do things as citizens of this country.
ReplyDeleteBeside this Muslim s had proud commendable history we were against to alcoholic beverages drugs gambling etc all respected . But sorry to say as a result of commercialisation other number reason now situation is charged. Our community leaders ACJU and other organisations should lead take measures and encourage our youngsters in education and enterprises
அருமையான வழி முறை
ReplyDeleteஇது இலங்கையின் அனைத்து பிரதேசங்களுக்கும் இப்படி விழிப்புணர்வு போஸ்ட்டர்களை கொண்டுவர வேண்டும்
நல்ல முயற்சி. இறைவனையும் (அவனிடம் தாம் பதில் சொல்ல வேண்டும் என அஞ்சும் அந்த) நியாயத் தீர்ப்பு நாளையும் நம்பும் ஓர் இறையச்சமுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞரை போதை வஸ்து ஒழிப்பு அமைச்சராக நியமித்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
ReplyDeletesa abu zalha nan kurai kura villa avarkalum nanmaiyadayyalam aduthan sonnen
ReplyDelete