Header Ads



"ஞானசாரர் கூறியது சட்டவிரோதம் இல்லையென்றால், விஜயகலா பேசியது சட்டவிரோதமல்ல"

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என ‍தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர். 

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து என்னிடம் நேரடியாக சொன்னார். 

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரனை மாத்திரம் விமர்சிப்பது ஏன்?  புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா?

விஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறியிருக்கலாம். ஒரு இராஜாங்க அமைச்சராக அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது கோபம் மிகவும் நேர்மையானது.

அத்துடன் இன்று யாழில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள், போதை வஸ்து கலாசாரம் தலை விரித்து ஆடுகிறது. சினிமா பாணி வாள்வீச்சு நடக்கிறது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸார் தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. We must obey his words and should work against the real terrorism that threat the globe. There is no point contradict with Gnanasara thero

    ReplyDelete
  3. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அடிப்படைவாதம்
    தலை தூக்குகிறது உடனடியாக இந்த பாசிச பயங்கரவாதத்தை அடிப்படைவாதத்தை தடைசெய்யவேண்டும் இந்த நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் ...

    ReplyDelete
  4. Wijayakala may not be happy about law and order situ in North. But her attempt to white wash LTTE murders and human rights violations by highlighting only the low incidence of violence against vchildren and women by antisocial elements other than murderous LTTE must be condemned. This cannot be justified by qouting another fasist Gnanasara himi.

    ReplyDelete
  5. ஆம் அமைச்சர் அவர்களே! விஜயகலா மகேஸ்வரனுக்கு தமிழ் மொழியும் அதன் சரியான பிரயோகமும் தெரியாது. அத்துடன் முதிர்ச்சியும் அனுபவமும் அற்றவர். அதனால் தான் யாழின் நிலைமைகளை புலிகளுக்கு ஒப்பாக்கி புலியின் ஆட்சியை மெச்சினார். இனி இராஜாங்க அமைச்ச ருக்கு நல்லதொரு தமிழ் கற்கும் வகுப்புக்கு அனுப்பி மக்கள் சார்பாக தமிழ் பயிற்சியை வழங்குவோம்.

    ReplyDelete
  6. விஜயகலாவும், முன்னர் இவரின் கணவர் மண்ணெண்ணை மகேஸ்வரன் ஆகியோர் கடந்த 20 வருடங்களாக UNP ஆட்கள். Ltte யை எதிர்த்து, ராணுவத்தின் துணையுடன் UNP க்கு யாழ்ப்பாணத்தில் ஆசனங்கள் பெற்று கொடுத்தவர்கள் இருவரும்.

    வித்யா கற்பழிப்பு-கொலையில் case யிலிந்து சுவிஸ் குமாரை தப்பிக்கவிட முயற்சித்து, case யில் மாட்டுபட்டவர். பின்னர் UNP செல்வாக்கில் தப்பி பிழைத்தவர்.
    இப்படி சுவிஸ் குமாருக்காக மட்டுமே போராடியவர்.

    கடந்த தேர்தலின் போதும் இப்படி பல statement கள் விட்டவர் (அரசியல் பகிடிகள்).
    இந்த முறை கொஞ்சம் ஓவர் acting பண்ணிவிட்டார், அவ்வளவு தான்.

    ஆனால், ஞானசேர பிக்குகளுக்கும், இந்த முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இவைகள் தெரியும். ஆனாலும் தமிழர்கள் மேல் வசைபாடுவதற்கு விஜயகலவை பயன்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  7. LTTE killed innocent Buddhists and Muslims to keep the Hindus safe and secure. Wijayakala should be well aware that LTTE recruited child soldiers by force, collected ransom, killed anyone who was against their ideology. I am sure today the Hindus are enjoying a peaceful life.

    ReplyDelete

Powered by Blogger.