இரும்பு மனிதன் இர்பான் ஹாபிஸ், வபாத்தானார்
தர்கா நகரை சேர்ந்தவரும் அரும்பு ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீனின் அவர்களின் மகனுமான இர்பான் ஹாபிஸ் அவர்கள் வபாத்தானார்கள் .
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
37 வயதுடைய இச்சகோதரர் சிறுவயது முதல் DMD என்ற நோயால் பாதிக்கப்பட்டு கட்டிலில் வாழ்வை நகர்த்தி வந்தாலும், தனது வாழ்வை பொது சேவைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் தன்னால் முடியுமான வகையில் நிறைவேற்றி வந்தவர் என்பதும், இரும்பு மனிதன் என அழைக்கப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
انالله وانااليه راجعون
ReplyDeleteانالله وانااليه راجعون
ReplyDeleteانا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ووسع مدخله واكرم نزله ووسع مدخله في جنة الفردوس الاعلى
ReplyDeleteசுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு தன் புத்தக வௌியீட்டின் போது பேசிய பேச்சைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். கட்டிலிருந்து எழும்பவோ எதையும் கையால் பிடிக்கவோ முடியாத எந்த வேலையையும் தன்னால் செய்ய இயலாத இர்பான் அவருக்கு அல்லாஹ் அருளிய தேகாரேக்கியம்,சிந்தனை அறிவு பற்றி பேசி அல்லாஹ்வுக்கு அவர் செலுத்திய நன்றிக்கடன் பேச்சை கேட்ட அனைவரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். யாஅல்லாஹ் சகோதரர் இர்பானை உன்னுடைய ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து அருள்பாலிப்பாயாக. அதே சுவனத்தை எங்கள் அனைவருக்கும் அருளுவாயாக. ஆமீன்
ReplyDeleteநான்கு வருடங்களுக்கு முன்பு இவரை நேரடியாகக் கண்டேன். சுபஹானல்லாஹ். விரலைத் தவிற வேறு எதையும் அவரால் அசைக்க முடியவில்லை. இருந்தும் அதன் பிறகு இவ்வளவு காலம் உயிர் வாழ வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும். யா அல்லா அவர சகல பாவங்களையும் மன்னித் மேலான சுவர்பத்தைக் கொடுப்பாயாக. யா அல்லாஹ் உனது பிரதி நிதியாக இருந்து இவ்வளவு காலமும் அவருக்கு பணிவிடை செய்த பெற்றோர் அடங்கலாக உதவியவர்களுக்கு நல்லருள் புரிவாயாக. J.M.Hafeez
ReplyDelete