Header Ads



சனத்தொகை சடுதியாக அதிகரிக்கிறதாம், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வலியுறுத்து

15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளீர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். 

நேற்று அனுஷ்டிக்கப்பட்ட உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டொக்டர் லெனரோல் கருக்கலைப்புக்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டார். 

இலங்கையில் நாளொன்றின் சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்வதாகவும் அவர் கூறினார். 

கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது. 

பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டொக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத்திட்டமிடல் மூலம் அநாவசிய கர்ப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். 

இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம குறிப்பிட்டார். 

5 comments:

  1. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
    (அல்குர்ஆன் : 17:31)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. பௌத்த இந்து மத அடிப்படையில் நல்லவர்கள் தான் திரும்ப மனிதனா பிறப்பார்கள்.அப்போ நம்ம நாட்டுல நல்லவர்கள் கூடுதலா இருக்காங்களா....
    அல்லது இவார்களின் கருத்தை இவர்களே உதாசீனம் செய்றாங்களோ? சரி இப்போ என்ன சனத்தொகை கூடினால் இவர்களுக்கு என்னவாம்?? எல்லாம் ஒரு சர்வேதேச நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி கிடக்குது(US AND ISRAEL)

    ReplyDelete
  3. karukalaippu adigammanal eppadi sanattogai kudum puriyavillla?

    ReplyDelete
  4. oru nalaikku 1000 enral sandosapadavum 1000*30*12 ok varusam 36000 sanat togai kuraigeradu

    ReplyDelete

Powered by Blogger.